பிரதான செய்திகள்

ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணி) யாப்புக்கு ஒப்புதல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் ‘ஸ்ரீலங்கா நிதாஹஸ் பொதுஜன சந்தானய’ ( ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணி) யாப்புக்கு ஒப்புதல் வழங்கியுள்ளன.


இதன்படி புதிய கூட்டணிக்கு கூட்டுத் தலைவர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

தவிசாளர், பொதுச்செயலாளர் மற்றும் நிதிச்செயலாளர் ஆகிய பதவிகள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு வழங்கப்படவுள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணிக்கான தேசிய அமைப்பாளர் பதவி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு வழங்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

டான் பிரியசாத் கொலைக்கு காரணமானவர்கள் யார்? போலீஸ் தகவல் .

Maash

சட்டம், ஒழுங்கு உறுதி செய்வதற்கு பொலிஸில் சாதகமான மாற்றம் அவசியம்.

Maash

பார்வையற்ற பெண் ஐ.ஏ.எஸ் (IAS) தேர்வில் வெற்றி வழிகாட்டிய சாப்ட்வேர்!

wpengine