உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

ஸ்ரீநகர் மக்களவை இடைத்தேர்தலில் பரூக் அப்துல்லா வெற்றி

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் லோக்சபா தொகுதி எம்பியாக இருந்த தாரிக் ஹமீத் காரா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பதவி விலகினார்.

இதனையடுத்து, அந்த தொகுதி காலியாக இருந்தது. இந்நிலையில் ஸ்ரீநகர் லோக்சபா தொகுதியில்  ஏப்ரல் 9ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
தேசிய மாநாட்டு கட்சி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பரூக் அப்துல்லா வேட்பு மனு தாக்கல் செய்தார். இதேபோல், மக்கள் ஜனநாயக கட்சி வேட்பாளர் நசீர் அகமதுகானும் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். ஸ்ரீநகர் தொகுதியில் கடந்த 9-ம்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. வெறும் 6.5 சதவீதமே வாக்குப் பதிவாகின. இந்நிலையில் தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. அதில் பரூக் அப்துல்லா 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இது குறித்து பரூக் அப்துல்லா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த தேர்தல் முடிவு தேசிய மாநாட்டு கட்சி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுக்கிறது. மாநில அரசை கவர்னர் உடனடியாக டிஸ்மிஸ் செய்து கவர்னர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும். மாநிலத்தில் உடனடியாக சட்டபை தேர்தலை நடத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

தொண்டமான் ஐக்கிய தேசிய கட்சிவுடன் இணையக்கூடிய சாத்தியம்

wpengine

விடைத்தாள் திருத்தும் பேராசிரியர்களுக்கான கொடுப்பனவு 90% ஆக அதிகரிப்பு!

Editor

வவுனியாவில் பொதிமோசடி! 7 பொலிஸ் முறைப்பாடு

wpengine