பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

ஸ்ரான்லி டிமெல் தலைமையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் ஆடிப்பிறப்பு கொண்டாட்டம்.

ஆடிப்பிறப்பில் தமிழர் நாம் கூடிக் கொண்டாடி குதூகலிப்போம் எனும் தொனிப்பொருளில் ஆடிப்பிறப்பு கொண்டாட்டம் இன்று(20) 10 மணி அளவில் ஆரம்பமானது.

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும், இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் மன்னார் மாவட்ட செயலகத்தின் ஒழுங்கமைப்பில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி . அ . ஸ்ரான்லி டிமெல் அவர்களின் தலைமையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

நிகழ்வின் ஆரம்பமாக விளக்கேற்றலுடன் நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் உருவப்படத்திற்கு மாவட்ட அரசாங்க அதிபர் மாலை அணிவித்து மரியாதை செய்தார் அதனை தொடர்ந்து அலுவலர்கள் புலவரின் படத்திற்கு மலர் மரியாதை செய்தனர்.

மேலும் நிகழ்வின் வரவேற்புரை திட்டமிடல் பணிப்பாளர் திரு.மகேஸ்வரன் அவர்களால் நிகழ்த்தப்பட்டது தொடர்ந்து ஆடிப்பிறப்பிற்கு நாளை விடுதலை எனும் பாடல் திருமதி.இசபெலலா, திருமதி அனிதா, திருமதி மேரி, சியாழினி செல்வி அருள்மொழி, செல்வி ஜானகி ஆகியோரினால் பாடப்பட்டது.

இதனை தொடர்ந்து தலைமை உரை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி . அ . ஸ்ரான்லி டிமெல், சிறப்புக் கவி மேலதிக அரசாங்க அதிபர் திரு.குணபாலன், ஆடி மாதத்தின் சிறப்புகள் பற்றிய சிறப்பு சொற்பொழிவு பிரதம கணக்காளர் திரு.செல்வரட்ணம் மற்றும் நன்றியுரை சிரேஷ்ட கலாச்சார உத்தியோகத்தர் திரு.நித்தியானந்தன் அவர்களால் நிகழ்த்தப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் மாவட்ட செயலகத்தின் உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

அத்துடன் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆடிக் கூழ் மற்றும் கொழுக்கட்டை என்பன பரிமாறப்பட்டன.

இந்நிகழ்வானது சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

District Media Unit,
District Secretariat Mannar.

Related posts

அடிப்படை வாதிகளை திருப்பதிப் படுத்த முஸ்லிம் அரசியல் தலைவருக்கு எதிராக பிரச்சாரம்

wpengine

மன்னார் அரசாங்க அதிபர் தலைமையில் சுதந்திரம்! பாடசாலை உபகரணங்களை வழங்கிய ஸ்ரான்லி டிமெல்

wpengine

3ஆம் ஆண்டு மாணவி பாத்திமா ஹசீதாவின் ஜனாஷா நல்லடக்கம்

wpengine