பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

ஸ்டான்லி டீமெல் தலைமையில் கணக்காய்வு முகாமைத்துவ குழு கூட்டம்

மன்னார் மாவட்ட செயலக கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டம் இன்று(30) காலை 10.00 மணிக்கு அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய திருமதி.ஸ்டான்லி டீமெல் அவர்கள் தலைமையில் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் கடந்த ஆண்டு காலங்களில் செயல்படுத்தப்பட்ட நிதி தொடர்பான வேலைத்திட்டங்களின் முன்னேற்ற அறிக்கை தொடர்பாக ஆராயப்பட்டது. இது தொடர்பில் நீண்டகாலமாக முன்னெடுக்கப்படாமல் இருந்த வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் அதன் நிதி தொடர்பான விடயங்களும் அதனை குறித்த காலத்தினுள் நிதியினை விடுவித்து வேலையினை முடிவுறுத்துவதற்கு ஆலோசிக்கப்பட்டது.

மேலும் மாவட்டத்தின் கணக்காய்வு முகாமைத்துவத்தினை எவ்வாறு சிறந்த முறையில் முன்கொன்டு செல்வது என்பது தொடர்பாகவும் திணைக்களங்களில் நிதியினை எவ்வாறு கையாள்வது அதனை முன்னெடுப்பதில் உள்ள சிக்கல் தொடர்பாக ஆராயப்பட்டு தீர்வூகளும் காணப்பட்டது.

இக்கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம கணக்காளர், உள்ளக கணக்காய்வாளர், சமுர்த்தி பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள், உள்நாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகள், மத்திய கணக்காய்வு உத்தியோகத்தர் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர்.

Related posts

குழந்தைகளின் போசாக்கின்மை தொடர்பில் ஆராய விசேட நாடாளுமன்றக் குழு நியமனம்!

Editor

அமைச்சர் ஹக்கீமுக்கு ஒரு மடல்

wpengine

மண் அகழ்வு சடலம்! நானாட்டான் பிரதேச சபையின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்

wpengine