மாவனல்லை ஸாஹிராக் கல்லூரியின் 79ஆவது பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கார் வோஷ் நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்றது.
முன்னணி பாடசாலைகளில் ஒன்றான மாவனல்லை ஸாஹிராக் கல்லூரி அண்மையில் தனது 95ஆவது சேவைக்காலப் பூர்த்தியை நிறைவு செய்தது. இதனை முன்னிட்டு அக்கல்லூரியின் 79 ஆவது பழைய மாணவர் சங்கத்தினால் பாரிய கார் வோஷ் நிகழ்வொன்று அண்மையில் கொழும்பு கண்டி ஏ1 பிரதான வீதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாவனல்லை “vogue auto spa” இல் நடைபெற்ற மேற்படி கார் வோஷ் நிகழ்வில் ஏராளமான பிரதேசவாசிகள், கல்லூரியின் பழைய மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர். 

ஸாஹிராக் கல்லூரியின் வளர்ச்சிக்குப் பெரிதும் பங்களிப்பு செய்துவரும் 79ஆவது பழைய மாணவர் சங்கம் இந்த நிகழ்ச்சியின் மூலம் திரட்டிய நிதியை எதிர்காலத்தில் கல்லூரியின் கல்வி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தவுள்ளது.
“”கார் வோஷ் நிகழ்வுக்கு ஒத்துழைப்பு வழங்கிய ஸாஹிராவின் பழைய மாணவர்கள் (zahirians) அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், எதிர்காலத்தில் இவ்வாறான மேலும் பல செயற்றிட்டங்களை முன்னெடுக்கவுள்ள எமது அமைப்புக்கு அனைவரும் உருதுணை வழங்குக” இவ்வாறு 79ஆவது பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் ரமீஸ் அன்சார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
