பிரதான செய்திகள்

ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை கொழும்பில்!

ஹிஜ்ரி 1444 புனித ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு நாளை(வெள்ளிக்கிழமை) மாலை மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உறுப்பினர்கள் மற்றும் உலமாக்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

நாட்டின் எப்பிரதேசத்திலாவது சவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டால் தகுந்த ஆதாரங்களுடன் 0112432110, 0112451245, 0777316415 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் முஸ்லிம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது

Related posts

பாதயாத்திரையிலீடுபட்டோரின் அருவருக்கத்தக்க செயல்

wpengine

காத்தான்குடி நகரை அதி சிறந்த சுத்தமான நகராக திகழ வைக்கும் வேலைத்திட்டம் -காத்தான்குடி நகர சபையினால் முன்னெடுப்பு

wpengine

கால்நடை அறுப்பதற்கு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ பாராளுமன்றக் குழுவிடம் சமர்ப்பித்தார்.

wpengine