முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தற்போது ஶ்ரீல்ஙகா பொதுஜன பெரமுனவின் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து முழுமையாக விலகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சாணக தெரிவித்துள்ளார்.
இதனால், கட்சியின் ஒழுங்கமைப்பு செயல்பாடுகளை, தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தலைமையில் தற்பொழுது முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஒழுங்கமைப்பு செயல்பாடுகளில் பசில் ராஜபக்ச ஈடுபடமாட்டார் அவர் தெரிவித்தார்.
பிரபல சிங்கள தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் இதனைக் குறிப்பிட்டார்.
தற்போது பசில் ராஜபக்ச அமெரிக்காவில் தங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
☀️ வன்னிநியூஸ் வட்ஸ்ப் குழுவில் இணைய: https://chat.whatsapp.com/ECH9aFFlKIJB0htsdAdJyg