பிரதான செய்திகள்

´ஶ்ரீலங்கா நிதஹஸ் பொதுஜன சந்தானய´ என்ற கூட்டணியில் போட்டியிடும்

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஒன்றிணைந்து ´ஶ்ரீலங்கா நிதஹஸ் பொதுஜன சந்தானய´ என்ற கூட்டணியில் போட்டியிடும் என தெரிவிக்கப்படுகின்றது.

தாமரை மொட்டு சின்னத்தில் இந்த கட்சி போட்டியிடும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் கட்சியின் தவிசாளராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நியமிக்கப்பட்டுள்ளதுடன் கட்சியின் பொதுச் செயலாளராக பெசில் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் அமைச்சர் விமல் வீரவங்ச ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கட்சியின் உப செயலாளராக உதய கம்மன்பில நியமிக்கப்பட்டுள்ளதுடன் உப தவிசாளர்களாக திஸ்ஸ வித்தாரண, இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, டியூ குணசேகர ஆகியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

‘இரட்டைச்சாய முள்வேலி முகாம் கொரோனா’ #கொவிட்19

wpengine

வவுனியா ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்! றிஷாட்,விக்கி பங்கேற்பு

wpengine

அரசியல்வாதி என்பவன் மண் யாவரத்துக்கும்,மாட்டு யாவரத்திற்கும் உதவி செய்பவனாக இருக்கக்கூடாது.

wpengine