பிரதான செய்திகள்

வை.எல்.எஸ் ஹமீதின் வினாக்களுக்கான தெளிவுகள்

(இப்றாஹிம் மன்சூர்)

 

ஒரு வாதத் திறமையுள்ளவர் ஒரு கூற்றிலுள்ள சிறு சிறு விடயங்களை தவிர்ப்பதன் மூலம் தான் நினைத்த பக்கம் ஒரு கருத்தை மாற்றியமைக்கலாம்.அதில் உண்மைகளும் புதைக்கப்படலாம்.அப்படியான ஒரு வேலையை தான் வை.எல்.எஸ் ஹமீத் செய்துள்ளார்.இதோ அதற்கான தெளிவுகள்.

 

1.அமைச்சர் றிஷாத் உண்மையை கூறுபவராக இருப்பின் தனது விவாத அழைப்பை ஏற்க தயங்குவதேன் என வினா எழுப்பியுள்ளார்.இவரது இவ் வினாவில் அமைச்சர் றிஷாத் பொய் சொல்லுகிறார் என்ற விடயம் மறைமுகமாக பொதிந்துள்ளது.ஒருவர் ஒரு விவாத அழைப்பை விடுக்கும் போது அதனை இன்னுமொருவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.விவாதத்திற்கு அழைக்கப்பட்டவர் விவாத அழைப்பை ஒரு பொருட்டாக கவனத்திற் கொள்ளாமல் இருக்கலாம்.குறித்த நபர் விவாதம் செய்ய தகுதியற்றவராக இருக்கலாம்.இப்படியும் வை.எல்.எஸ்  ஹமீத் சிந்திக்க வேண்டும்.அமைச்சர் றிஷாதிடம் விவாத அழைப்பை விடுப்பவர்களிடமெல்லாம் அமைச்சர் றிஷாத் விவாதம் செய்ய வேண்டுமாக இருந்தால் அவர் அமைச்சர் பதவியை பதவியை இராஜினாமா செய்துவிட்டு விவாதம் செய்வதையே முழு நேரத் தொழிலாக செய்ய வேண்டும்.

 

2.அமைச்சர் றிஷாத் செயலாளர் பிரச்சினை பற்றி கூறியவைகள் “குருநாகலில் நடந்த பேராளர் மாநாட்டில் வைத்து நாங்கள் செயலாளராக சுபைர்தீன் ஹாஜியாரை தெரிவு செய்தோம்.அவர் செயலாளராக செயல்படுவதை தடை செய்யுமாறு முன்னாள் செயலாளராக இருந்த வை.எல்.எஸ் ஹமீத் வழக்குத் தொடுத்தார்.அதனை நீதி மன்றம் நிராகரித்தது.இருந்தாலும் தீர்ப்பு வழங்கப்படவில்லை”என்றே கூறுகிறார்.

 

இது உண்மை இல்லையா? இது உண்மை இல்லை என்றால் நீங்கள்  21-01-2016ம் திகதி வியாழக்கிழமை வழக்கு தொடுத்தது எதற்காக? நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்ட உங்கள் கோரிக்கை தான் என்ன?

 

சுபைர்தீன் ஹாஜியார் செயலாளராக செயற்பட முடியாதவாறு 21-01-2016ம் திகதி வியாழக்கிழமை வை.எல்.எஸ் ஹமீத் நீதிமன்றத்திடம்  தற்காலிக தடையுத்தரவை கோரினார்.அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.தற்காலிக தடையுத்தரவு என்பது ஒரு வழக்கின் ஆரம்ப படி.அந்த படி நிராகரிக்கப்பட்டதன் மூலம் வழக்கு நிறைவுறாது.இதன் காரணமாகத் தான் வழக்கு தொடர்கிறது.இதனை தான் அமைச்சர் றிஷாத் மறைமுகாக  அவரது அன்றைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டாலும் தீர்ப்பு வெளியாகவில்லை எனக் கூறுகிறார்.இதில் என்ன குற்றம் பிடித்தார் வை.எல்.எஸ் ஹமீத்? வை.எல்.எஸ் ஹமீத் அமைச்சர் றிஷாத் எழும்பினாலும் குற்றம் நின்றாலும் குற்றம் என்ற வகையிலேயே செயற்படுகிறார்.

 

நானே சட்டப்படியான அ.இ.ம.காவின் செயலாளர் என வை.எல்.எஸ் ஹமீத் கூறும் காணொளியை பார்த்த பிறகே இவர் எப்படி இதனை கூற முடியும் என்ற வகையில் தான் அமைச்சர் றிஷாத் இவர் சட்டப்படியான செயலாளர் அல்ல என்பதை நிறுவ முயல்வதை அவதானிக்க முடிகிறது.நீதி மன்றத்தில் வழக்கு உள்ள போது வை.எல்.எஸ் ஹமீத் எவ்வாறு தானே அ.இ.ம.காவின் சட்டப்படியான  செயலாளர் என கூற முடியும்.

 

3.தலைமைத்துவ சபையின் முடிவுகள் யாப்பின் பிரகாரம் 2/3 பெரும்பான்மையினால் எடுக்கப்படலாம் என அமைச்சர் றிஷாத் கூறியதை காட்டி அது யாப்பின் எத்தனையாவது சரத்து என வினா எழுப்பியுள்ளார்.நாம் அமைச்சர் றிஷாதிற்கு யாப்பு தெரியாது என்றே வைத்துக்கொள்வோம்.இங்கு ஒரு உண்மை புலனாகிறது.கட்சியில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு அடிக்கடி தலைமைத்துவ சபை கூடி முடிவெடுத்திருந்தால் அமைச்சர் றிஷாதிற்கு இவ்விடயம் நினைவிரிந்திருக்கும் என்பதாகும்.கட்சியின் அனைத்து விடயங்களையும் அமைச்சர் மாத்திரம் கையாண்டுள்ளார் என்பதே அந்த உண்மையாகும்.அப்படியானால் நாங்கள் தலைமைத்துவ சபையில் உள்ளவர்கள்  என வை.எல்.எஸ் ஹமீத் கூறிக்கொண்டு அமைச்சர் றிஷாதிடம் பொட்டிப்பாம்பாய் இவ்வளவு நாளும் அடங்கி கிடந்தாரா?

 

4.குறித்த நிகழ்ச்சியில் அமைச்சர் றிஷாத் வை.எல்.எஸ் ஹமீத் தேசியப்பட்டியலுக்காகத் தான் தங்களுடன் முரண்பட்டார் என்ற வகையில் கூறுகிறார்.அதனை வை.எல்.எஸ் ஹமீத் சிறிதும் மறுக்கவில்லை.இதன் மூலம் வை.எல்.எஸ் ஹமீத் பகிரங்கமாகவே தான் தேசியப்பட்டியலுக்காகவே கட்சி மாறினேன் என்பதை ஏற்றுக்கொள்கிறார்.இதற்கு முதலில் வை.எல்.எஸ் ஹமீத்திற்கு  நன்றி சொல்ல வேண்டும்.

 

அவரது நான்காவது வினாவில் தேசியப்பட்டியல் பகிர்வை தலைமைத்துவ சபையை கூட்டி ஏன் முடிவு எடுக்கவில்லை என கேட்டுள்ளார். வை.எல்.எஸ் ஹமீத் பல இடங்களில் தனக்கு அமைச்சர் றிஷாத் தேசியப்பட்டியல் தருவதாக வாக்களித்ததால் அதனை தராமை துரோகமென கூறியுள்ளார்.அமைச்சர் றிஷாத் வை.எல்.எஸ் ஹமீதிடம் உங்களுக்கு தேசியப்பட்டியல் தருகிறேன் என கூறிய போது  இதனை நீங்கள் தலைமைத்துவ சபையை கூட்டி முடிவெடுத்தா கூறுகிறீர்கள் என ஒரு தடவையாவது கேட்டுள்ளீர்களா.உங்களுக்கு தருவதென்றால் தலைமைத்துவ சபையை கூட்டி முடிவெடுக்க தேவையில்லை.மற்றவர்களுக்கு வழங்குவதென்றால் தலைமைத்துவ சபையை கூட்டி முடிவெடுக்க வேண்டுமா? இதற்கு வை.எல்.எஸ் ஹமீத்தால் பதில் தர முடியுமா?

 

அ.இ.ம.காவானது அமைச்சர் றிஷாதின் தீவிர முயற்சியில் சிறகு முளைத்து பறந்து கொண்டிருக்கும் ஒரு கட்சி என்பது உலகமறிந்த உண்மை.அவர் தனித்து முடிவெடுத்தாலும் தவறில்லை.இருந்தாலும் இவ்விடயத்தில் அவர் கட்சியின் இரண்டாம் அந்தஸ்திலுள்ள அமீர் அலி போன்ற முக்கியஸ்தர்களுடன் கதைத்து செயற்பட்டுள்ளார் என்பதை பகிரங்கமாகவே கூறியுள்ளார்.

 

5.அவரது ஐந்தாவது வினா “நீங்கள், இரண்டு தேசியப்பட்டியல் கிடைத்திருந்தால் ஜமீலுக்கும் ஒன்று வழங்கப்பட்டிருக்கும் என்றீர்கள். அவ்வாறு ஜமீலுக்கும் வழங்குவதானால் புத்தளத்திற்கு எவ்வாறு வழங்க முடிந்திருக்கும். பின்னர் கூறினீர்கள் , இரண்டு கிடைத்திருந்தால் இரண்டாவது செயலாளருக்கு கிடைத்திருக்குமென்று. அப்படியானால் அப்பொழுதும் ஜமீல் ஏமாற்றப்பட்டுத்தான் இருந்திருப்பார்.அவ்வாறானால் நீங்கள் ஒரு நயவஞ்சகன் என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா?

 

குறித்த நிகழ்ச்சியில் அமைச்சர் றிஷாத் “வெற்றி பெற்ற நான்கு ஆசனங்களுக்கு மேலதிகாம இன்னும் நான்கு ஆசனங்கள் கிடைத்திருந்தால் அதனை வை.எல்.எஸ் ஹமீத்,ஜெமீல் ஆகியோருக்கு வழங்கியிருப்போம்” என்றே கூறியிருந்தார்.இங்கு ஆல் எனும் நிபந்தனை உள்ளமை மிகவும் அவதானம் செலுத்த வேண்டிய விடயமாகும்.அதற்கு சற்று முன்பு அவர் எதிர்பார்த்து தோல்வியடைந்த நான்கு ஆசனங்களையும் யார் யார் என்று கூறியிருந்தார்.அதில் புத்தளம் நவவியும் ஒருவராவார்.இப்படி இருக்கும் போது இரண்டு தேசியப்பட்டியல் கிடைத்தால் அதனை  வை.எல்.எஸ் ஹமீத்,ஜெமீல் ஆகியோருக்கு வழங்குவதில் என்ன தவறுள்ளது?

 

தேவை ஏற்படின் குறித்த நிகழ்வை மீண்டும் ஒரு தடவை நன்றாக கேளுங்கள்.

 

6.ஊடகவியலாளர்களை கூலிக்கு அமர்த்தி எழுதுவதான குற்றச் சாட்டுக்கு பூமுதீனை மாத்திரம் ஆதாரமாக காட்டியுள்ளீர்கள்.முதலில் உங்களுக்கு ஒருமை பன்மை படித்து தர வேண்டும்.ஊடகவியாளர்கள் என்றால் பன்மை அதற்கு பல பெயர்களை கூற வேண்டும்.குறைந்தது இரண்டு பெயர்களை சுட்டிக்காட்டி இருக்க வேண்டும்.ஒன்றை மாத்திரம் கூறியமை ஊடகவியலாளர்கள் என்பது பன்மை என்பதை நீங்கள் அறியாமல் இருக்க வேண்டும் அல்லது சுட்டிக்காட்ட  வேறு ஆட்கள் இல்லாமல் இருக்க வேண்டும்.

 

ஒரு அமைச்சருக்கென்று ஊடகப் பிரிவு இருக்கும்.அதற்கு அமைச்சர்கள் சம்பளம் வழங்குவது ஊரறிந்த உண்மை.பூமுதீனை வைத்து அறிக்கை எழுதுவது குற்றமல்ல.நீங்கள் கூறுவதை வைத்து பார்க்கும் போது தனது அறிக்கைகளை அமைச்சர் றிஷாத் குந்தியிருந்த எழுத வேண்டுமோ தெரியவில்லை.

 

இருபத்தையாயாரம் ரூபாவுக்கு டாக்டர் பட்டம் வாங்கியது தொடர்பாக குறித்த ஒருவருக்கெதிராக உங்களது அடியாள் ஒருவருக்கு எழுதச் சொல்லி உத்தரவு கொடுத்தது, தவறுதலாக வட்ஸ்அப்பில் பதிவாகி அமைச்சர் றிஷாத் நாறியதாக கூறியுள்ளீர்கள்.வை.எல்.எஸ் ஹமீத் கூறும் குறித்த ஓடியோவில் எங்கும் யாரிடமும் அமைச்சர் றிஷாத் இதற்கு எதிராக எழுத கூறவில்லை.அவர் ஒரு வட்ஸ்அப் குழுமத்தில் நேரடியாக வந்து அதற்கு எதிராக கதைத்தார்.இது தான் நடந்தது.வை.எல்.எஸ்  ஹமீத் அங்கும் இங்கும் கேட்டதை சந்திக்கு கதைக்க கொண்டு வந்துவிட்டார்.

 

இல்லை இல்லை இப்படித் தான் சொன்னாரென குறித்த ஓடியோவை முன்னிறுத்தி வை.எல்.எஸ் ஹமீத் நிரூபிப்பாரா?

 

இறுதியாக ஒன்றை மட்டும் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.அமைச்சர் றிஷாத் தேவையில்லை.அவரது அமைச்சின் தலைவர் பதவியை இத்தனை காலமும் வைத்திருந்தமையை நினைத்து நீங்கள் வெட்கப்படவில்லையா?

Related posts

இன்றைய பெண்கள் செயற்திறன் மிக்கவர்கள்- அமீர் அலி

wpengine

விக்கியின் விசாரணை குழுவில் மோசடி,சிறைவாசம்

wpengine

சம்பூர் அனல் மின் நிலையத்திற்கு எதிர்ப்பு! தோப்பூரில் ஆர்ப்பாட்டம்

wpengine