பிரதான செய்திகள்

வைத்திய பரிசோதனை! இரு வாரத்திற்குள் ஆரம்பிக்கப்படும்

வாகன சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்ளும் போது தேவையான வைத்திய பரிசோதனையை அரசாங்க வைத்தியசாலைகளில் மேற்கொள்வதற்கான வசதிகள் இரு வாரத்திற்குள் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த விடயத்தை போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

இது குறித்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுலுகம குறிப்பிடுகையில்,


சம்பந்தப்பட்ட வைத்தியசாலைகளுக்கு இந்த வைத்திய பரிசோதனையை மேற்கொள்வதற்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.


வெரஹெரவில் அமைந்துள்ள மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் பொதுமக்களுக்கு வழங்கும் சேவை முறையான வகையில் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

அபிவிருத்திப் பாதையை நோக்கி தில்லையடி அல்ஜித்தா கிராமம்

wpengine

இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பொன் விழா – 2016

wpengine

ஏன் இவர்களை கைது செய்யவில்லை! அமைச்சர் றிஷாட் கேள்வி

wpengine