செய்திகள்பிரதான செய்திகள்யாழ்ப்பாணம்

வேலை கிடைக்காததால் பல்கலைக்கழக பட்டதாரி இலைஞ்சர் தற்கொலை.

யாழ்ப்பாணத்தில்(Jaffna) வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று(04.02.2025) இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம், கைலாச பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த 28 வயதுடைய தங்கவேல் விபுசன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், உயிரிழந்த இளைஞன் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்தவராவார்.

இருப்பினும் இரண்டு வருடங்களாக வேலை கிடைக்காத காரணத்தால் இன்றையதினம்(04) தனது வீட்டில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். இந்நிலையில், அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related posts

தேர்தலுடன் தொடர்பில் இதுவரை 54 வேட்பாளர்களும், 204 சந்தேக நபர்களும் கைது!

Maash

முதன்மை பல்கலைக்கழகமாக பெயரிடப்பட்ட பேராதனைப் பல்கலைக்கழகம்!

Editor

நல்லிணக்கப் பொறிமுறைக்கு மக்களிடம் கருத்தறியும் அமர்வு – வாகரையில்

wpengine