அறிவித்தல்கள்செய்திகள்பிரதான செய்திகள்

வேலைக்காக வெளிநாடு செல்லவிருப்போருக்கான முக்கியமான அரிவித்தல்.








இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் வகையில் உள்நாட்டு அல்லாத துறைகளில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தேடும் அனைத்து இலங்கையர்களும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்வதற்கு முன்பு அந்தந்த நாட்டிலுள்ள இலங்கை தூதரகத்திடமிருந்து தங்கள் வேலைவாய்ப்பு ஒப்பந்தங்களுக்கான சான்றிதழைப் பெற வேண்டும் என்று அறிவித்துள்ளது.

அதங்கமைய சவுதி அரேபியா, குவைத், பஹ்ரைன், கட்டார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமான், இஸ்ரேல், ஜோர்தான், லெபனான், மாலைத்தீவு, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு குடிபெயரும் தொழிலாளர்களுக்கு இந்த கட்டாயத் தேவை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை, புறப்படுவதற்கு முன் ஒப்பந்த வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்வதன் மூலம் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட உரிமைகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் தொழில்முறை பிரிவுகளில் சுயதொழில் செய்வதற்காக பயணிக்கும் தனிநபர்களுக்கு இந்தத் தேவை பொருந்தாது. இது புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை என பணியகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts

வவுனியாவில் கடையொன்று தீயினால் முற்றாக சேதம்

wpengine

டக்ளஸ் தேவானந்தா கேள்வி! அமைச்சர் சுவாமிநாதன் காலஅவகாசம்

wpengine

வரவு செலவு திட்டத்தில் மீனவர்கள் கண்டு கொள்ளப்படவில்லை-என்.எம்.ஆலம்

wpengine