வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது திட்டத்திற்கு அமைவாக, கிராம அபிவிருத்தித் திணைக்களத்தால் மாகாண அபிவிருத்தி நன்கொடையின் கீழ் (PSDG), யாழ் மாவட்ட வேலணை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வேலணை கிழக்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்துக்கு மோர் மிளகாய் பதனிடும் உபகரணங்களுக்கு ரூபாய் 05 இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. அதனை உத்தியோகபூர்வமாக அச் சங்கத்திற்கு கையளிக்கும் நிகழ்வு 28-04-2016 வியாழன் மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றது.
நிகழ்விற்கு வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடக்கு மாகாணசபையின் உறுப்பினர் பா.கஜதீபன், அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்கள பணிப்பாளர் ஜே.ஜே.சி.பெலிசியன், வேலணை பிரதேச செயலாளர் திருமதி.சு.தெய்வேந்திரம் மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், அக்கிராமத்து மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
