பிரதான செய்திகள்

வேட்புமனு நிராகரிப்பு! ஒருவர் மாரடைப்பால் மரணம்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்டதன் காரணமாக மனமுடைந்து போன ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

பாணந்துறை ஹிரன கல்துடுவ பிரதேசத்தை சேர்ந்த ஏ.பெட்டிகிரி ஆராச்சிலாகே தோன் நிமல் அஜந்த விஜேசேகர என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பாணந்துறை வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டிருந்த போது ஊடகவியலாளர்கள் எனக் கூறி சிலர் உடலை படம்பிடிக்க முயற்சித்த போது, வைத்தியசாலையில் ஏனைய அதிகாரிகள் அதனை தடுத்ததால், அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

மேலும், சம்பவம் குறித்து பாணந்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.இதேவேளை, ஊடகவியலாளர்களுக்கு எதனையும் படம்பிடிக்கும் உரிமை இருப்பதாக ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸார் அதற்கு மறுத்துள்ளனர். இதற்கு எதிராக ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டுள்ளது.

Related posts

முல்லைத்தீவில் இளம் பெண் தூக்கில் தொங்கி தற்கொலை

wpengine

அவதானம் . ! ஈ8 விசா பிரிவின் கீழ் தொழில்…

Maash

அலுவகத்தில் ஊழியர்கள் இருவருக்கு இடையில் மோதல், ஒருவர் மரணம்..!

Maash