பிரதான செய்திகள்

வேட்டையாடும் கும்பல் ; பேஸ்புக்கில் அதிர்ச்சிப் படங்கள் பதிவேற்றம்

காட்டு மிருகங்களை வேட்டையாடிவரும் கும்பல் தொடர்பான புகைப்படங்கள் பேஸ்புக் சமூகவலைத்தளத்தில் வெளியாகிவருன்றது.

இந்நிலையில் இது தொடர்பில் பொலிஸார், வனவிலங்கு அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென முகப்புத்தகம் வாயிலாக பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதேவேளை, குறித்த புகைப்படங்களில் அரிய வகை மிருகங்களான மான், வௌவால், காட்டுப்பூனை, முயல், மரை, முள்ளம்பன்றி, காட்டுக்கோழி, மர அணில் போன்ற மிருகங்கள் வேட்டையாடப்பட்டுள்ளன.

வேட்டையாடப்பட்ட மிருகங்களுடன் குறித்த நபர்கள் துப்பாக்கிகளுடன்  நின்றவாறு எடுத்த படங்களும் உணவுக்காக பயன்படுத்தப்படுவது போன்ற படங்களும் பேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது.

குறித்த படங்களில் கட்டுத்துவக்குகள், துப்பாக்கிகள் மற்றும் கத்திகள் என்பனவும் காணப்படுகின்றன.

எது எவ்வாறாக இருப்பினும் குறித்த புகைப்படத்திலுள்ளவர்கள் தொடர்பில் பொலிஸார் மற்றும் வனவிலங்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே அநேகரின் வேண்டுகோளாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மாடறுப்புக்கு எதிராக பௌத்த மத பிக்குகள் ஆர்ப்பாட்டம்

wpengine

வவுனியா போக்குவரத்துக்கு இடையூர் மக்கள் குற்றம்

wpengine

செப்டெம்பர் பொலித்தீன் தடை! அமைச்சர் றிஷாட்டை சந்தித்த உற்பத்தியாளர்கள் சங்கம்

wpengine