செய்திகள்பிரதான செய்திகள்

வேகக்கட்டுப்பாட்டை இலந்த மோடார்சைக்கிள், காத்தான்குடி 17 வயது சிறுவன் பலி..!

இன்று அதிகாலை காத்தான்குடியில் இடம்பெற்ற விபத்தில் 17 வயது சிறுவன் ஒருவர் உயிரிழப்பு

காத்தான்குடி கடற்கரை வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற மோட்டார்சைக்கிள் விபத்தில் காத்தான்குடியை சேர்ந்த 17 வயதான முஹம்மட் (17) என்ற சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை காத்தான்குடி கடற்கரை வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த சிறுவன் செலுத்திச் சென்ற மோடார்சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின்சாரத் தூணுடன் மோதி விபத்துக்குள்ளான நிலையில் படுகாயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளான்.

விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் முன்னெடுக்கின்றனர்.

Related posts

அத்துமீறிய சிங்கள குடியேற்றம்! சமலின் கவனத்திற்கு கொண்டு வந்த சாணக்கியன்!

wpengine

பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு சப்ரி திடீர் விஜயம்

wpengine

தேசபந்து தென்னகோன் வீட்டு உணவு பெறுவதற்காக முன்வைத்த கோரிக்கை பரிசீலினை..!

Maash