இந்தியா, நேபாளம் மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகள் வெள்ளத்தால் பெரும் அளவில் பாதிக்கப்பட்டன. பல லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில் 1 மில்லியன் டாலர் நிவாரணத் தொகையை கூகுள் நிறுவனம் வழங்க உள்ளதாக தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தியாவிற்கான கூகுள் நிறுவன துணைத்தலைவர் அறிவித்துள்ளார்.
கூகுள் நிறுவனத்தின் தன்னார்வ தொண்டு நிறுவனமான கூகுள் ஆர்க் மூலம் இந்த உதவி வழங்கப்படுகிறது. இந்த அமைப்பு இந்தியாவின் 9 மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 75 ஆயிரம் குடும்பங்களுக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உணவு, உடை மற்றும் இதர பொருட்களை வழங்கி வருகிறது. மேலும் நாட்டில் சேதமடைந்த சாலைகள், பாலங்கள் மற்றும் பள்ளிகளை சீரமைக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளது.
அதே போல் நேபாளம் மற்றும் வங்காளதேசத்திலும் இந்த அமைப்பு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகின்றது.