“நெருக்கடியான காலகட்டத்தில் கூட கொள்ளையடிப்புகள் நிறுத்தப்படவில்லை எனவும், வெள்ளைப்பூடு முதல் சீனி வரை அனைத்து விடயங்களிலும் மோசடிகள் அரங்கேறியுள்ளன என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது,
“நாட்டை எப்படி ஆள்வது எனத் தற்போதைய ஆட்சியாளர்களுக்குத் தெரியவில்லை அதனால் தான் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் கோவிட்டை காரணம் காட்டுகின்றனர். அதன் மூலம் அனுதாபம் திரட்டுவதற்கு ஆளுங்கட்சியினர் முற்படுகின்றனர்.
தமது இயலாமையை மூடிமறைக்கப் பலதும் செய்கின்றனர். ஆனால், தமக்கு முடியாது என்பதை ஆட்சியாளர்கள் ஏற்கனவே நிரூபித்துவிட்டனர்.
சர்வதேசத்தை நாட முடியாது, நாடினால் உதவியும் கிடையாது. எனவே, நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய தலைமைத்துவத்தை உருவாக்க வேண்டும். அதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன்.
சம்பளம் உட்பட எந்தவொரு வரப்பிரதாசங்களையும் வாங்காமல் சிறந்த வழிகாட்டலை வழங்குவேன் என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.