பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வெள்ளிமலை கள்ளிக்குளம் கீழ்வுள்ள பல ஏக்கர் அரச காணி அபகரிப்பு! பல அமைப்புக்கள் ஜனாதிபதிக்கு மகஜர் அனுப்புவைப்பு

முசலி பிரதேசத்தில் அரச காணிகள் அபகரிப்பு செய்வதை தடுத்து நிறுத்தக்கோரி பல்வேறு அமைப்புக்கள் இணைந்து ஜனாதிபதிக்கு அவசர மகஜர் ஒன்றை அனுப்பி வைப்பு.

முசலி பிரதேசத்தில் உள்ள இலந்தைக்குளம் கிராம அபிவிருத்திச் சங்கம், இலந்தைக்குளம் கமக்காரர் அமைப்பு, அல் அக்ஸா ஜீம்ஆ மஸ்ஜித், மஸ்ஜிதுல் ஹுதா ஜீம்ஆ பள்ளி ஆகியவை இணைந்து குறித்த மகஜர் ஜனாதிபதிக்கு வழங்கும் வகையில் இன்று வியாழக்கிழமை (5) மாலை மன்னார் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த மகஜரில் மேலும் குறிப்பிடுகையில்,,,

மன்னார் மாவட்டம் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவின் பண்டார வெளி கிராம சேவையாளர் பிரிவில் உள்ள வெள்ளிமலை மீள்குடியேற்ற கிராமத்தின் கள்ளிக்குளம் என்னும் குளத்தின் கீழ் உள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான அரச காணிகளை சிறுக்குளம், சிலாவத்துறை பகுதியைச் சேர்ந்த சிலர் அடாத்தாக பிடித்து வருகின்றனர்.

மேற்படி அரசு நிலமானது 2009 ஆம் ஆண்டு மனிதாபிமான நடவடிக்கை வெற்றிகரமான நிறைவின் பின்னர் புத்தளம் மாவட்டத்தில் சுமார் 25 வருட காலமாக இடம் பெயர்ந்து அகதி முகாம்களில் வாழ்ந்து வந்த மக்கள் தங்களினால் நாட்டுக்கு ஆற்றப்பட்ட உன்னத சேவையின் காரணமாக 2009 ஆம் ஆண்டு, ஒக்டோபர் மாதம் முதல் தங்கள் பூர்வீக வாழ்விடங்களுக்கு மீள் குடியேற்றிய அப்போதைய அரசாங்கம் அழைப்பு விடுக்கப்பட்டதற்கு அமைய குறிப்பிட்ட ஒரு பகுதி மக்கள் மீள்குடியோற்றத்திற்கு வருகை தந்தார்கள்.

2010ஆம் ஆண்டு வெள்ளிமலை பகுதியில் பயன்பாடற்றுக் காணப்பட்ட மேச்சல் நிலமாக அடையாளப்படுத்தப்பட்ட காணியை பகிர்ந்தளிக்க துறைசார் அதிகாரிகளினால் தீர்மானிக்கப்பட்டு 28-01-2010 மற்றும் 28-04-2011 ஆம் திகதி கிராம சேவையாளரினால் அடையாளம் காட்டப்பட்டு நில அளவை அதிகாரியினால் நில அளவீடு செய்யப்பட்டு அரச காணியை மேற்படி நபர்கள் அடாத்தாக அபகிரித்துள்ளார்கள்.

மேற்படி விடயம் தொடர்பாக 2014 ஆம் ஆண்டு முசலி பிரதேச செயலாளர், மாவட்ட செயலாளர், மாகாண காணி ஆணையாளருக்கு என பலருக்கும் முறைப்பாடுகள் கொடுக்கப்பட்டு காலத்துக்கு காலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வந்திருந்த போதும் அடாத்துக்காணி பிடித்தல் விடயத்தை நிறுத்தப்பட்டதாக தெரியவில்லை.

தொடர்ச்சியாக மேலும் காணிகளை அபகரித்து கொண்டு வருகின்றார்கள். மேலும் அரச காணியினை வழங்கும் போது அரசாங்க சட்ட திட்டங்களுக்கு முரணான முறையிலும், சரியான முறையில் நடை முறைப்படுத்தப்படாமலும் குறிப்பிட்ட நபர்களுக்கு தலா ஒரு ஏக்கர் வீதம் முன்னாள் முசலி பிரதேச செயலாளர் 2014ஆம் ஆண்டு எஸ்.கேதீஸ்வரன் வழங்கியுள்ளார்.

மேலும் கள்ளிக்குளம் 5ஏக்கர் நிலப்பரப்புக்கும் குறைவான பரப்பைக்கொண்ட எவ்விதமான பாசன் கால்வாய்களுமற்ற மழையை மாத்திரம் நம்பி பயிர் செய்யப்படும் குறித்த சிறிய நீர்பாசன குளத்தின் கீழ் எவ்வாறு 30 ஏக்கர் பயிர்ச் செய்கை மேற்கொள்ளவது என்றும் சாதாரண கேள்வி அனைவர் மனதிலும் இருந்து கொண்டிருக்கின்றது.

இது தொடர்பான முறைப்பாடுகளை முசலி பிரதேச செயலகத்திற்கு கடந்த 2020/11/02ஆம் திகதி வழங்கி இருக்கின்றோம்.

அத்துடன் காணி அபகரிப்பாளர்கள் முசலி பிரதேச செயலகத்திற்கு வழங்கியுருக்கும் ஆவணங்களில் பல குறைப்பாடுகள் மற்றும் எல்லை பிரச்சினைகள் இருப்பதை நாங்கள் அறிந்து கொண்டோம்.

கடந்த 03-1102020 அன்று முசலி பிரதேச செயலக காணி அளவிட்டாளர்கள் வருகை தந்து காணியினை பார்வையிட்டுள்ளனர். ஆனால் மக்கள் வழங்கிய முறைப்பாட்டு எல்லையினை உரிய முறையில் அளவீடு செய்யாமல் அடாத்தாக காணியினை அபகரித்த நபர்கள் கூறிய இடங்களை மட்டும் பார்வையீட்டு அளவீடுகளை மேற்கொண்டுள்ளார்கள்.

அனவே குறித்த பிரதேசத்தில் உள்ள அரச காணிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

காணி இல்லாத நபர்களை இனம் கண்டு அவர்களுக்கு அரச காணியினை வழங்க ஆவணம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துளள்னர்.

குறித்த மகஜரின் பிரதிகள்

மன்னார் மாவட்ட பதில் அரசாங்க அதிபர்,காணி அமைச்சர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related posts

இஸ்லாமிய பெண்களுக்கு ஏனையோர் போன்று சம உரிமை வேண்டும்-WAN

wpengine

போதைப்பொருள் விற்பனையை கண்டும் காணாமலும் இருக்கும் உடுவில் பிரதேச செயலகம்.

wpengine

பேஸ்புக் வியாபரம் மன்னிப்பு கோரிய நிறுவனம்

wpengine