Breaking
Sun. Nov 24th, 2024

(ரெமேஸ் மதுசங்க) 

அண்மைக்காலமாக அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதுவுமே செய்யாமல், தமிழகத்தின் முதலமைச்சராக ஜெயராம் ஜெயலலிதா மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். என வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் ஒரு தீர்மானத்தை சமர்ப்பித்ததை கண்டித்து, வடமாகாண சபை உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, சபையில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ் நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கும் செய்த சேவை காரணமாக ஜெயலலிதா, மீண்டும் தேர்தலில் வெற்றி பெற முடிந்ததையிட்டு  இலங்கை தமிழ் மக்களும் மகிழ்ச்சியடைவதாக சி.வி விக்கினேஸ்வரன் கூறியிருந்தார்.

‘ஜெயலலிதா வெற்றியை கொண்டாடுவதற்கு பதிலாக, அண்மைக்காலமாக அனர்த்தங்களினால் தமது உறவுகளையும் உடமைகளையும் இழந்த மக்களின் துன்பத்தில் பங்கு கொள்வதே செய்ய வேண்டியது’ என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர் ப.விஜயதிலக தெரிவித்தார்.

‘உள்நாட்டிலிருந்தும் சர்வதேச ரீதியாகவும் உதவிகள் கிடைக்கப் பெற்ற போதும் வடமாகாண சபை எதுவும் செய்யவில்லை’ என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் அன்ரன் ஜெயநாதன் கூறினார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *