Breaking
Sun. Nov 24th, 2024

(சுஐப் எம்.காசிம்) 

 

இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான  றிசாத் பதியுதீன் இன்று காலை (02/09/2016) சந்தித்தார்.

கொழும்பு, ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில், மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தரும், பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லாஹ் மஹ்ரூப், கொழும்பு பல்கலைக்கழக அரசியல்துறை விரிவுரையாளர் கலாநிதி அனீஸ் ஆகியோரும் உடனிருந்தனர்

முஸ்லிம் சமூகமும் மோசான முறையில் பாதிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் றிசாத், வடமாகாணத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் 25 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியேற்றப்பட்டு, இன்னும் அகதி முகாம்களில் வாழ்வதாகத் தெரிவித்தார். இந்த மக்களின் குடியேற்றத்துக்கும், அவர்களின் நலன்களைப் பேணுவதற்கும் ஐ.நா சபையின் பங்களிப்பு இன்றியமையாதது என்றார்.

அரசியலமைப்புச் சீர்திருத்தம், தேர்தல்முறை மாற்றம் மற்றும் அதிகாரப்பகிர்வு என்பவற்றில் அனைத்து இனங்களும் பாதிக்கப்படாத வகையிலான செயற்பாடுகள் உறுதிப்படுத்தப்பட வேண்டுமென, அவர் ஐ.நா செயலாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்தார்.

மக்கள் காங்கிரஸின் தூதுக்குழுவினர், ஐ.நா செயலாளர் நாயகத்திடம் இலங்கை முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பல்வேறு விடயங்கள் தொடர்பான, புள்ளி விபரங்கள் அடங்கிய மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *