செய்திகள்பிரதான செய்திகள்

வெளிநாட்டு யுவதியுடன் காதல் , தனது உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞன்.!

காதல் தொடர்பில் இருந்த இளைஞன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் இன்று  இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் மணல்சேனை கிட்டங்கி வீதி பகுதியைச் சேர்ந்த மதியழகன் சஞ்சய்  ( வயது-24 ) தூக்கில் தொங்கிய நிலையில் அவரது வீட்டில் இருந்து  பொலிஸாரினால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காதல் விவகாரமே இந்த தற்கொலைக்கு காரணம் என ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.இந்த நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டு கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

பின்னர் கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் அப்துல் ரசீட் முஹம்மது கலீல் கட்டளைக்கமைய குறித்த சடலத்தின் மீதான  மரண விசாரணைகளை  திடீர் மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் ஜவாஹீர்    மேற்கொண்டுள்ளதுடன் மூச்சுக் குழாய் இறுகி மரணம் சம்பவித்துள்ளதாக குறிப்பிட்டு  சடலம் உறவினர்களிடம் மாலை ஒப்படைக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்தவர் தொலைபேசி ஊடாக  வெளிநாடு ஒன்றிலுள்ள யுவதி ஒருவருடன் காதல் தொடர்பில் இருந்த நிலையில் இச்சம்வம் இடம்பெற்றுள்ளதாகவும்  காலை வேளை உயிரிழந்த இளைஞனின் தாய் தனது உறவினர் வீட்டுக்கு சென்று வந்த நிலையில்  இவ்வாறு தூக்கில் தொங்கி  காணப்பட்டதாக மேலதிக விசாரணைகளில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மன்னாரில் “இணைந்த கரங்கள்” அமைப்பினால் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

Editor

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி முஸ்லிம் பிரிவின் ஒன்றுகூடல்! மஸ்தான்,ஹிஸ்புல்லாஹ் ,பௌசி

wpengine

அவதணம் ! வடக்கில் ஆசை வார்த்தைகளை கூறி ஆள்கடத்தல்கள் அதிகரிப்பு .

Maash