பிரதான செய்திகள்

வெளிநாட்டு பட்டம் பெற்றவர்கள்! ஜனாதிபதி இணைத்துக்கொள்ள நடவடிக்கை

வெளிநாடுகளில் பட்டம் பெற்ற நபர்ககளை இலங்கையில் அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


வெளிநாடுகளில் பட்டம் பெற்ற 4100 பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.


அவர்களை அரச சேவையில் இணைத்துக் கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.


அதற்கமைய எதிர்வரும் நாட்களில் நேர்முக தேர்வு நடத்தி அவர்களை பின்தங்கிய பகுதிகளில் ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம், தகவல் தொழில்நுட்பம் போன்ற பாடங்களை கற்பிப்பதற்காகவும், ஏனைய வெற்றிடமாக உள்ள தொழில்களில் அவர்களை இணைத்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


அதன் ஊடாக வெளிநாட்டு கற்கைகளில் ஈடுபட்டவர்கள் இந்த நாட்டில் தொழில் பெற்றுக் கொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

1000மாணவர்களுக்கு உதவி செய்த மேல் மாகாண சபை உறுப்பினர்

wpengine

சாய்ந்தமருது கபீரின் மறைவுக்கு, அமைச்சர் றிசாத் பதியுதீன் அனுதாபம்

wpengine

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு!

wpengine