வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பொன்றை மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ரோஹன திசாநாயக்க வழங்கியுள்ளார்.
அதன்படி தொழிற்பேட்டைகள், வர்த்தக மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் என்பவற்றை மேற்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட விரும்பும் வெளிநாட்டுகளிலுள்ள இலங்கையர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
குறித்த முயற்சிகளில் ஈடுபட விரும்புபவர்களுக்கு தேவையான வசதிகள் மாகாணசபை, பிரதேசசபை மூலம் செய்து கொடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நாடு இன்று எதிர்நோக்கியுள்ள டொலர் பிரச்சினைக்கு தீர்வாக வெளிநாட்டில் பணியாற்றுபவர்கள் டொலரினை இலங்கைக்கு அனுப்புவதை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட வேண்டும் என அரச அதிகாரிகளுக்கும் அவர் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.