பிரதான செய்திகள்

வெளிநாட்டு தம்பதியின் பெறுமதியான பொருட்கள் மற்றும் பணத்தை திருடியவர் கைது!

வஸ்கடுவ பிரதேசத்தை சேர்ந்த 26 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பிரித்தானிய தம்பதியிடம் இருந்து இரண்டு வெளிநாட்டு கடவுச்சீட்டுகள், விசாக்கள், வங்கி அட்டைகள் மற்றும் 40 இலட்சம் ரூபா பெறுமதியான பணம் என்பன திருடப்பட்டுள்ளன.

திருடப்பட்ட பொருட்கள் சில பற்றைக்குள் மறைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் பிரித்தானிய தம்பதியின் பணத்தையும் பொருட்களையும் திருடி, பாதுகாப்பு பெட்டகத்தை கடலில் வீசியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர் களுத்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Related posts

நல்ல மனிதர்களை உருவாக்கும் தொழிற்சாலை பாடசாலை -எம்.எஸ்.எஸ்.அமீர் அலி

wpengine

மத்திய மாகாண சபையில் அமைச்சர் ஹக்கீமுக்கு இன்று எதிர்ப்பு!

wpengine

ரோஹிங்யா முஸ்லிம்களுக்காக ஐ.நா.முகவர்களை சந்தித்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

wpengine