பிரதான செய்திகள்

வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை இணையவழியில் வழங்கும் வேலைத்திட்டம் நாளை ஆரம்பம்!

கடவுச்சீட்டுகளை இணையவழி முறையில் வழங்கும் வேலைத்திட்டம் நாளை (15) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

இதன் ஆரம்ப நிகழ்வு ஹோமாகம பிரதேச செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

கடவுச்சீட்டை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

 
புதிய வேலைத்திட்டத்தின் கீழ், விண்ணப்பித்த மூன்று நாட்களுக்குள் கடவுச்சீட்டை கோரியுள்ளோர் இந்த சேவை மூலம் வீட்டுக்கு பெற்றுக்கொடுக்க முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.

எவ்வாறாயினும், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஒரு நாள் கடவுச்சீட்டு சேவை வழமை போன்று இயங்கும் என அமைச்சர் டிரான் அலஸ் மேலும் தெரிவித்தார்.

Related posts

ரணிலுக்கு தடையுத்தரவு!

Editor

மைத்திரிபால தொடர்பில் விசாரணை தேவை! கத்தோலிக்க திருச்சபை கோரிக்கை

wpengine

வடக்கில் தமிழ் தரப்பினரின் இனவாத துண்டு பிரசுரங்கள்.

wpengine