செய்திகள்பிரதான செய்திகள்

வெளிநாட்டில் வேலை செய்யும் இலங்கையர்கள் ஜனவரியில், நாட்டுக்கு அனுப்பிய தொகை 573 மில்லியன் அமெரிக்க டொலர் .!

கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் இலங்கைக்கு 573 மில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டில் பணிபுரிபவர்கள் அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது கடந்த ஆண்டின் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 17.5 வீதமாக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 487.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டில் பணிபுரிபவர்கள் மூலம் இலங்கைக்கு கிடைத்துள்ளது.

இந்தத் தொகை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 613.8 மில்லியன் டொலர்களாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சப்ரகமுவ மாகாண ஆளுநராக நவீன் திசாநாயக்க நியமனம்!

Editor

போனஸ் ஊடாக பாராளுமன்றம் செல்லும் ரணில்- அர்ஜூன ரணதுங்க

wpengine

பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் – மகளிர்,சிறுவர் விவகார அமைச்சர் சந்ராணி பண்டாரவினால் திறந்து வைப்பு-(படங்கள்)

wpengine