Breaking
Sun. Nov 24th, 2024

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு இலங்கையில் முதலீடு மற்றும் தொழில் வாய்ப்புக்களை உருவாக்கி கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராக உள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும்,

வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களை நாட்டுக்கு வரவழைத்து முதலீடு மற்றும் தொழில் வாய்ப்புக்களை உருவாக்கும் பொருட்டு அரசாங்கம் 11 அம்ச கொள்கை திட்டம் ஒன்றை தயாரித்துள்ளது.

மேலும் வட மாகாணத்தில் இரண்டு வருடத்தில் விவசாயத்துறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் தயார் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

அதுமட்டுமல்லாது பெண் தலைமைத்துவத்தை கொண்ட குடும்பங்கள், கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், முதியவர்கள் சமுர்த்தி பயனாளிகள் மற்றும் நிரந்தர வாழ்விடங்களை அற்றவர்கள் தொடர்பிலும் தொடர்ச்சியாக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

வடக்கில் எரிபொருள் விநியோகம், அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் என்பவற்றை தடையின்றி வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

தீவக பகுதிகளின் தேவைகள் தொடர்பில் அவதானம் செலுத்தி வருகின்ற நிலையில் அரச சேவையின் மூலம் மக்களிடமே தேடிச் சென்று குறை தீர்க்கும் கலாச்சாரம் மேலும் அதிகரிக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *