பிரதான செய்திகள்

வெலிகமவில் முச்சக்கர வண்டி புகையிரதத்துடன் மோதியதில் இருவர் பலி – நால்வர் படுகாயம்!

வெலிகம, பெலான பகுதியில் உள்ள புகையிரத கடவையில் முச்சக்கர வண்டி ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 4 பேர் காயமடைந்து, மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (03) பிற்பகல் மாத்தறையில் இருந்து கண்டி நோக்கிச் சென்ற புகையிரதம், வெலிகம புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் சென்று கொண்டிருந்த போது வெலிகம பெலான ரயில் கடவையில் முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் முச்சக்கர வண்டியில் தாயுடன் 3 பிள்ளைகளும் மற்றுமொரு உறவினரும் பயணித்துள்ளனர்.

இராணுவத்தில் கடமையாற்றி விடுமுறையில் வந்திருந்த 32 வயதுடைய உறவினர் ஒருவர் முச்சக்கரவண்டியை ஓட்டிச் சென்றதாகவும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த 9 வயது குழந்தை மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது.

ஏனைய இரண்டு பிள்ளைகள், தாய் மற்றும் மற்றுமொரு உறவினர் சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொல்வத்துமோதர கல்லூரியில் கல்வி கற்கும் 3 பிள்ளைகளையும் தாய் ஏற்றிச் சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பில் வெலிகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கால் போத்தல் மதுபானங்களுக்கு வைப்புக்கட்டணம் தேவை! அமைச்சர்

wpengine

முஸ்ஸிம் மக்களையும் சந்தேக கண்ணுடன் பார்ப்பது தவறு

wpengine

கிழக்கு முதலமைச்சு முஸ்லிம்களுக்கு மாத்திரம் என்கின்ற தோற்றப்பாட்டினை உருவாக்க சிலர் முனைகின்றனர் ஷிப்லி

wpengine