முன்னாள் மஹிந்த ராஜபக்ச, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் இவ்வாறு மூன்று முனைகளில் ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் சந்திப்புக்களை நடத்துதல், மத வழிபாடுகளை நடத்துதல் உள்ளிட்டன மூலம் மக்களை தெளிவூட்டும் நடவடிக்கைகளில் மஹிந்த ராஜபக்ச ஈடுபட்டுள்ளார்.
புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஊடாக தொகுதி அமைப்பாளர்களை நியமித்தல், இளைஞர் அணிகளை உருவாக்குதல், மகளிர் அணிகளை உருவாக்குதல் போன்றவை ஊடாக 20 இலட்சம் உறுப்பினர்களை கட்சியில் இணைக்கும் முயற்சியில் பசில் ராஜபக்ச ஈடுபட்டுள்ளார்.
நாட்டின் புத்திஜீவிகள், தொழில்வான்மையாளர்கள், நிபுணர்களை மறைமுகமாக இணைத்துக் கொண்டு மற்றுமொரு முனையில் கோத்தபாய ராஜபக்ச அணி திரட்டி வருகின்றார் என ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்திஜீவிகளையும், தொழில்வான்மையாளர்களையும் இணைத்துக் கொண்டு நாட்டை கட்டியெழுப்பும் கோத்தபாயவின் திட்டம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் முன்னெடுக்கப்பட உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.