தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

வெடிக்கும் ஐபோன் 7

சம்சுங் நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட சம்சுங் கேலக்ஸி நோட் 7 கையடக்கத்தொலைபேசிகள் வெடித்து சிதறியதனால் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்திருந்த கையடக்கத்தொலைபேசிகளை மீளப்பெற்றிருந்தது. இச் சம்பவமானது சாம்சுங் நிறுவனத்திற்கு பாரிய இழப்பினை ஏற்படுத்தியிருந்தது.

இப்படியிருக்கையில் தற்போது ஐபோன் 7 கையடக்கத்தொலைபேசியும் வெடித்து சிதறியுள்ளதாக செய்தியொன்று வெளியாகியுள்ளது.

குறித்த வெடிப்பு சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ள நிலையில் வெடிப்புக்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை.

இச் சம்பவத்தின் காரணமாக புதிய ஐபோன்களை வாங்குவதில்  ஐபோன் கையடக்கத்தொலைபேசி பிரியர்கள் சற்று பின்தங்கியுள்ளனர்.

கையடக்கத்தொலைபேசி உற்பத்தியில் முன்னணியில் திகழும் அப்பிள் மற்றும் சம்சுங் நிறுவனங்களின் புதிய கைப்பேசிகள் இவ்வாறு வெடிப்பது தொழில்நுட்ப வல்லுனர்களால் துரதிர்ஷ்டமான சம்பவமாக கருதப்படுகின்றது.38ee190000000578-0-image-a-48_1475177506419

Related posts

எமது சந்ததியினரின் எதிர்காலத்தை சூனியமாக்கும் அதிகாரமற்ற கல்வி நிறுவனங்கள்

wpengine

சுயநல அரசியல் காரணங்களுக்காதூவப்பட்ட இனவாதம்! இன்று ஒற்றுமையாகிவிட்டது.

wpengine

ஹக்கீமை பூஜை செய்ய மர்ஹூம் அஷ்ரஃபின் கபூரில் பூ பறிக்கும் ஜவாத்

wpengine