கொரோனா தொற்று நோய்க்கு உலகளவில் நேற்றைய தினம் (21) அதிகளவான தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல், அதிகளவான கொவிட் 19 தொற்றாளர்களும் நேற்றைய தினமே பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய நேற்றைய தினத்தில் மாத்திரம் கொரோனா தொற்றுக்குள்ளான 14,122 பேர் உலகளவில் உயிரிழந்துள்ள நிலையில், 881,124 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 14.35 கோடியைக் கடந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 12.18 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
மேலும், வைரஸ் தாக்குதலுக்கு மொத்தமாக 30.56 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பரவியவர்களில் 1.85 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் ஒரு லட்சத்து 9 ஆயிரத்துக்கு 400-க்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இலங்கையில் இதுவரை 98,050 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 630 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.