பிரதான செய்திகள்

வீதி புனரமைப்பு பணிகளை பார்வையிட்ட ஷிப்லி பாறூக்

(எம்.ரீ. ஹைதர் அலி)

கிராமத்திர்கொரு வேலைத்திட்டத்தின் கீழ் புனரமைப்பு செய்யப்பட்டுவரும் காத்தான்குடி வடக்கு வாவிக்கரை வீதி மற்றும் முஹ்சீன் மௌலானா வீதி என்பவற்றின் புனரமைப்பு பணிகளை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் நேரில் சென்று பார்வையிட்டார்.

இவ்விஜயத்தின்போது காத்தான்குடி நகரசபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களையும் குறித்த இடத்திற்கு அழைத்துச் சென்ற கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் அங்கு புனரமைப்பு பணிகளில் ஈடுபடும் பணியாளர்களை சந்தித்து புனரமைப்பு பணிகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டார். மேலும் இவ்வீதியானது சிறந்த முறையில் நீர் தேங்கி நிற்காமல் வடிந்தோடக்கூடிய வகையிலும், சிறந்த தரமுள்ள கொங்ரீட் கலவைகள் இடப்பட்டு இவ்வீதி அமைக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலும் புனரமைப்பிற்கான தனது ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினார்.

மிக நீண்ட காலமாக புனரமைப்பு செய்யப்படாமலிருந்த இவ்வீதிகளை புனரமைத்து தருமாறு அப்பகுதி மக்களும் அவ்வீதியினை பயன்படுத்துகின்றவர்களும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களிடம் விடுத்த வேண்டுகோளினை அடுத்து மக்கள் பங்களிப்புடன் இவ்வீதியினை புனரமைக்க கிராமத்திற்கு ஒரு வேலைதிட்டத்தின்கீழ் இவ்வீதிகள் உள்வாங்கப்பட்டு வாவிக்கரை வீதியின் புனரமைப்பிற்காக 1,000,000 ரூபாயும், முஹ்சீன் மௌலானா வீதியின் புனரமிப்பிர்காக 770,000 ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டு இவ்வீதிகள் கொங்ரீட் வீதிகளாக புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.unnamed-3

Related posts

முஸ்லிம் தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும் – இரா.சம்பந்தன்

wpengine

மன்னாருக்கு விஜயம் மேற்கொண்ட பிரதி அமைச்சர் புத்திக பத்திரன

wpengine

பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் மீது சில குழுக்கள் தாக்குதல்

wpengine