பிரதான செய்திகள்

வீதி புனரமைப்புக்கான அங்குரார்ப்பண நிகழ்வு நாளை

புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளுக்கு அமைய உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் 2 கோடி 96 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் காத்தான்குடி கடற்கரை வீதி செப்பனிடும்; வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

காத்தான்குடி கடற்கரை வீதி கலிமா சதுக்கத்தில் நாளை மாலை 4 மணிக்கு காத்தான்குடி நகர சபையின் முன்னாள் நகர பிதா எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில், இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார். அத்துடன், கௌரவ அதிதிகலாக கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கே.எல்.எம். பரீட், காத்தான்குடி நகர சபையின் முன்னாள் பிரதி தவிசாளர் எம்.ஐ.எம்.ஜேஸீம் மற்றும் முன்னாள் நகர சபை உறுப்பினர்களான றவூப் அப்துல் மஜீத், அலி சப்ரி, சல்மா அமீர் ஹம்ஸா ஆகியோர் கலற்து கொள்ளவுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரான இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மட்டக்களப்பு மாவட்டத்தில் புனரமைப்பு செய்யப்படாத பல வீதிகளை இனங்கண்டு அவற்றுக்கு தீர்வினைப் பெற்றுத் தருமாறு  உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவிடம் விடுத்த விசேட வேண்டுகோளுக்கு அமைய அதற்கான நிதிகள் ஒதுக்கப்பட்டு வீதிகள் புனரமைப்புச் செய்யப்பட்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

Related posts

சதொச ஊடாக3,000 மெட்ரிக் தொன் அரிசியை வினியோகம்

wpengine

பயமுறுத்தும் அமைச்சரும் பயந்து விட்ட மக்களும்

wpengine

ஹிருனிக்காவுக்கு பயந்து! ஜனாதிபதியின் சோதிடருக்கு விஷேட பாதுகாப்பு

wpengine