பிரதான செய்திகள்

வீதியில் தலைகீழாக நின்று ஆர்ப்பாட்டம் செய்த அரசியல்வாதிகள்

உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்பட்டு ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் அரசாங்கம் உடனடியாக உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடாத்த வேண்டும் என அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர்கள் தலைகீழாக நின்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தார்கள்.

குறித்த ஆர்ப்பாட்டம் நுவரெலியா – கினித்தேன பஸ்தரிப்பு நிலையத்துக்கு முன்பாக இன்று பகல் நடைபெற்றுள்ளது.

அம்பகமுவ பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினர் எலப்பிரிய நந்தராஜ் தலைமையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதே மேற்படி இருவர் தலைகீழாக நின்றுள்ளனர்.

உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்பட்டு ஒரு வருடம் கடந்துள்ளது. எனினும் இதுவரை தேர்தல் நடத்தப்படவில்லை. இதனால் பிரதேச சபைகள் செயலிழந்து காணப்படுகின்றன. நாட்டில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நகரசபை மற்றும் பிரதேசசபைகளால் உதவ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக அரசாங்கம் தேர்தலை நடத்த வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில்கலந்து கொண்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.625.0.560.320.500.400.197.800.1280.160.95 (1)625.0.560.320.500.400.197.800.1280.160.95 (3)

Related posts

இரத்தினபுரி மக்களின் இயல்பு வாழ்வைத் துரிதப்படுத்த அமைச்சர் றிஷாட் நடவடிக்கை

wpengine

ஜனவரியில் உள்ளுராட்சி தேர்தல் ரணில்

wpengine

ஈரான் போரை தொடங்கவில்லை, ஆனால் அதன் முடிவைத் தீர்மானிக்கும்.

Maash