பிரதான செய்திகள்

வீட்டுத்தேவைகளை பூர்த்தி செய்ய புதிய வங்கி உருவாக்கம் -ரணில்

இலங்கையின் வீட்டுத்தேவைகளை பூர்த்தி செய்ய அரசாங்கம் புதிய வங்கி ஒன்றை உருவாக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் 70வது ஆண்டு நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய அவர், மூன்று வங்கிகளை இணைந்து வீடமைப்புக்காக புதிய வங்கி ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் குறைந்த வட்டியின் அடிப்படையில் பொதுமக்கள் வீடமைப்பு கடன்களை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் ரணில் கூறியுள்ளார்.

இதற்காக நிதியமைச்சும், வீடமைப்பு அமைச்சும் இணைந்து செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அரசாங்கம், வடக்கு கிழக்கு மற்றும் மலையக பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளையும் நாட்டின் ஏனைய பகுதி மக்களின் பிரச்சினைகளையும் தீர்க்க முயற்சித்து வருவதாக ரணில் விக்கிரமசிங்க கூறினார்

இதற்கிடையில் நாட்டின் நலனுக்கு எதிராக தமது கட்சி, செயற்படாது என்றும் பிரதமர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

Related posts

சிங்கராஜவனத்தை பாதுகாக்க V-FORCE தன்னார்வத் தொண்டர் படையணி

wpengine

“அரசாங்கம் Mp க்களுக்கு வாகனங்களை வழங்காது”

Maash

65,000 வீட்டுத்திட்டத்துக்கான விண்ணப்பபடிவம் வழங்கும் நிகழ்வு

wpengine