பிரதான செய்திகள்

வீடு நோக்கி சென்ற சிறுவனை காட்டு யானை தாக்கம்

வவுனியா – வாகல்கட, ஹெப்பற்றிகொலாவ பகுதியில் தனது வீடு நோக்கி சென்று கொண்டிருந்த சிறுவனை காட்டு யானை தாக்கியுள்ளதாக தெரியவருகிறது.
இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதுடன், இதில் படுகாயமடைந்த குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.

ஷாமோட் (வயது 15) என்ற சிறுவன் தன்னுடைய நண்பனின் வீட்டுக்கு சென்று விட்டு பின்னர் தனது வீடு நோக்கி துவிச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த வேளை யானை அவரை தாக்கியுள்ளது.

இதில் படுகாயமடைந்த அந்த சிறுவன் ஹெப்பற்றிகொலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை சிறுவன் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இந்த சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

Related posts

மன்னார் மடு வலய மாணவர்களுக்கு உபகரணம் வழங்கிய சிவகரன்

wpengine

பிரபுடன் எனக்கொரு அழகான உறவு இருந்தது. அது மிக அழகான தருணம்.குஷ்பு

wpengine

3குழந்தை பெற்ற பெற்றோரின் அவசர கோரிக்கை

wpengine