பிரதான செய்திகள்

விஷேட விமானம் மூலம் கொழும்பு செல்லும் விஜயகலா

சிறுவர் மற்றும் பெண்கள் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளார்.

அதற்கமைய அவர் தற்போது யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்றுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இன்று மாலை 6.30 மணியளவில் அலரி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

விடுதலை புலிகள் அமைப்பு மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் யாழில் இடம்பெற்ற கூட்டத்தில் வைத்து குறிப்பிட்டிருந்தார்.

இந்த விடயம் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அமைச்சர் கொழும்பு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வரி அறவீட்டு செயற்பாடுகளில் குறைபாடு – பாட்டலி சம்பிக்க ரணவக்க!

Editor

வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் தமிழ் கொலை

wpengine

ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்குமாறு கூட்டமைப்பு, மஸ்தான் எம்.பி மீண்டும் அடம்பிடிப்பு: ஆதரிக்க முடியாதென அமைச்சர் றிசாத்

wpengine