இஸ்ரேலிய படைகள் நேற்று விடுவித்த பாலஸ்தீனிய பணயக் கைதி ஒருவர் ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் காணப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விடுவிக்கப்பட்டதன் பின்னர் அவர் பேசும் ஒரு காணொளிப் பதிவு தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த நபரின் முகம் மற்றும் உடல் ஆகியவை ஊட்டச்சத்து பற்றாக்குறைக்கான அடையாளத்துடன் காணப்படுகின்றன.
பாலஸ்தீனிய கைதியான இவர் நேற்று இஸ்ரேலிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
45 நாட்களாகக் கண்களைக் கட்டி, கைவிலங்கு பூட்டி, முழங்கால் போடும்படி இஸ்ரேலிய படைகள் கட்டாயப்படுத்தியதாகவும் சிறையிலிருந்து விடுவிக்கும் முன்பு மின்சாரம் பாய்ச்சியும், நாய்களை ஏவி விட்டும் கொடுமைகளைச் செய்ததாகவும் குறித்த காணொளியில் தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் அமைப்பினர் சிறைபிடித்திருந்த இஸ்ரேல் பணய கைதிகள் சிலரின் அவல நிலை பற்றிய செய்தி வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்திய சூழலில், பாலஸ்தீனிய கைதியின் அவல நிலையைப் பற்றிய செய்தியும் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.