பிரதான செய்திகள்

விவசாயிகளின் வறுமை ,கடன் சுமைகளை மீட்க ஒன்றிணைய வேண்டும் -ஜனாதிபதி

நாட்டின் தேசிய பொருளாதாரத்தை வலுவடையச் செய்யும் விவசாயிகளுக்காக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட வேண்டிய சகல பொறுப்புக்களையும் நிறைவேற்றுவதற்கு அரச கொள்கைக்கு அமைய தான் கட்டுப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

எம்பிலிப்பிட்டி புத்தி மண்டபத்தில் இன்று (11) முற்பகல் நடைபெற்ற மகாவலி மகா விவசாயி, சிறந்த மகாவலி விவசாய அமைப்புக்கான பரிசுகள் மற்றும் விருதுகளை வழங்கும் வைபவத்தில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.13901545_10154271603666327_7670103207899133938_n

வறுமை மற்றும் கடன் சுமையிலிருந்து விவசாயிகளை மீட்டெடுத்து, அவர்களது பொருளாதாரத்தை வலுவடையச் செய்வதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும். புதிய தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிகளின் ஊடாக விவசாயத்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்களை நிறைவேற்றுவதற்கு பொறுப்பு வாய்ந்த சகல நிறுவனங்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.13924866_10154271603011327_6692900778153626355_n

ரஜரட்ட விவசாயிகளின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றி இன்று மொராஹாகந்த – களுகங்கை நீர்த்தேக்கத்தின் நிர்மாணப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மேலும்,  புதிய திட்டமிடல் மற்றும் வேலைத்திட்டத்தினூடாக மகாவலி வலயங்களில் விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்தி விவசாயப் பொருளாதாரத்தை வலுவடையச் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.13912708_10154271603026327_453147830770830343_n

Related posts

வவுனியாவில் புகையிரத கடவை அமைக்க கோரி மகஜர்

wpengine

வடக்கில் இணைந்த நேர அட்டவணைக்கு இ.போ.ச இணக்கம் – டெனிஸ்வரன்

wpengine

கழுதைக்கு கரட் காட்டுவது போல! அட்டாளைச்சேனைக்கு ஹக்கீமின் தேசிய பட்டியல்

wpengine