பிரதான செய்திகள்

விவசாயக் காப்புறுதி சபையின் தலைவர் பிரேமச்சந்திர யாப்பா பதவி இராஜனமா?

விவசாய மற்றும் விவசாயக் காப்புறுதி சபையின் தலைவர் பிரேமச்சந்திர யாப்பா தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

அரசுக்கு சொந்தமான நிறுவனத்தில் இனி மனசாட்சிப்படி செயல்பட முடியாது என்பதால் இந்த முடிவை எடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்

தமது பதவி விலகல் கடிதத்தை அவர் நேற்று முன்தினம் 24ஆம் திகதி விவசாய அமைச்சருக்கு அனுப்பியுள்ளார். 

இது தொடர்பில் விவசாய மற்றும் விவசாய காப்புறுதி சபையை எமது செய்திச்சேவை தொடர்புக்கொண்டபோது, தமது தலைவர் பதவி விலகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும், சபைக்கு இன்னும் அது அறிவிக்கப்படவில்லை என்றும் தெரிவி்க்கப்பட்டது.

அதேநேரம் இன்று அவர் சபைக்கு வரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜெயலலிதா மீண்டும் சிறை செல்வது உறுதி – சுப்ரமணியன் சுவாமி

wpengine

பசுமை விவசாயத்துக்கான அரசாங்கத்தின் கொள்கையில் மாற்றமில்லை-ஜனாதிபதி

wpengine

மகிந்த ராஜபக்ச போன்றவர்கள் காண்கின்ற கனவுக்கு சாவு மணியடிக்க வேண்டும் அமீர் அலி

wpengine