பிரதான செய்திகள்

வில்பத்து வர்த்தமானி! முஸ்லிம்கள் அதீத வெறுப்புக்கொண்டுள்ளனர்-றோகித அபே குணவர்த்தன

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை முஸ்லிம்களிடமிருந்து  பிரிக்க சதி செய்யும் சதி காரர்களை அமைச்சர் பௌசி இணங்காட்ட வேண்டுமென நேற்று களுத்துறையில்  இடம்பெற்ற முஸ்லிம்களுடனான  சந்திப்பின் போது  அமைச்சர் பௌசி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை முஸ்லிம்களிடமிருந்து பிரிக்க சிலர் சதி செய்வதாக கூறிய கருத்து தொடர்பில் கருத்து வெளியிட்ட  பாராளுமன்ற உறுப்பினர் றோகித அபே குணவர்த்தன தெரிவித்தார்.

 

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்

 

அண்மையில் அமைச்சர் பௌசி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை விட்டும் முஸ்லிம்களை பிரிக்க சதி செய்வதாக கூறி இருந்தார்.இன்று முஸ்லிம்கள் பல விடயங்களில் இவ்வரசுடன் வெறுப்பு கொண்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.அண்மையில் ஜனாதிபதி மைத்திரி கையொப்பமிட்ட வில்பத்து வர்த்தமானி தொடர்பில் முஸ்லிம்கள் தற்போதைய ஜனாதிபதி மைத்திரி மீது அதீத வெறுப்புக்கொண்டுள்ளனர்.முஸ்லிம்கள் தங்களுக்கு விமோசனம் கிடைக்குமென நம்பிய எந்த விடயங்களிலும் அவர்களுக்கு இன்று வரை சிறிதும் விமோசனம் கிடைக்கவில்லை.அவர்களின் பிரதான பார்வையாக அமைந்த அளுத்கமை கலவரம் தொடர்பில் எந்த விதமான முன்னேற்றங்களையும் அவர்கள் பெற்றுக்கொள்ளவில்லை.இன்று முஸ்லிம்கள் தற்போதைய ஜனாதிபதியிடம் இருந்து தூரமாகின்றார்கள் என்றால் அதற்கு இன்றைய ஜனாதிபதியின் செயற்பாடுகள் தான் காரணமே ஒழிய வேறேதுமில்லை.

 

தற்போதைய ஜனாதிபதியின் செயற்பாடுகளினால் முஸ்லிம்கள் அதிருப்தியுற்று ]முஸ்லிம்களின் தரப்பிலிருந்து பலவாறான எதிர்ப்புக்கள் ஜனாதிபதியை சென்றடைந்துள்ளன.முஸ்லிம் தரப்பு ஊடகங்கள் தற்போதைய ஜனாதிபதிக்கு எதிராக மாறியுள்ளது.இதனையறிந்த அமைச்சர் பௌசியே ஜனாதிபதியை காப்பாற்ற  இவ்வாறு கூறியிருக்க வேண்டும்.அப்படி ஜனாதிபதி மைத்திரியை பிரிக்க சதி இடம்பெறுமாக இருந்தால் அவர்கள் யார் என்பதை அமைச்சர் பௌசி இணங்காட்ட வேண்டும்.பௌசியின் இவ்வறிக்கை மூலம் தற்போதைய ஜனாதிபதியின் மதிப்பு முஸ்லிம்களிடையே கேள்விக்குறியாகியுள்ளமையை விளங்கிக்கொள்ளலாம்.

 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் காலத்தில் இடம்பெற்ற அனைத்துக்கும் மக்களிடையே அவரை குற்றவாளியாக்கியே இன்றைய ஆட்சியளார்கள் ஆட்சியை கைப்பற்றினார்கள்.தற்போது அதே குற்றச் சாட்டுக்கள் இடம்பெறும் போது அதனை சதி என்கிறார்கள்.இன்று இடம்பெறுவது சதி என்றால் அன்று இடம்பெற்றதும் சதி தானே! அன்று இடம்பெற்றது சதியாக இருந்தால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை ஆட்சியிலிருந்து வீழ்த்தியது பிழையான விம்பத்தை தோற்றுவித்தாகும் என குறிப்பிட்டார்.

Related posts

ரஷ்யாவுக்கு ஆதரவாக 16000 ஆயிரம் சிரியா படை உக்ரேனில்

wpengine

போராட்டம் முடிவு! இரு குழுக்களுக்கிடையில் மீண்டும் முறுகல்

wpengine

மன்னார் மக்களை ஏமாற்றும் நகை கடை உரிமையாளர்கள்

wpengine