பிரதான செய்திகள்

வில்பத்து வர்த்தகமானி அறிவித்தல் ரத்துச்செய்ய வேண்டும்! மரிச்சிக்கட்டி,பாலைக்குழி, கரடிக்குழி மக்கள் போராட்டம்!

(எஸ்.எச்.எம்.வாஜித்)

மன்னார் முசலி பிரதேசத்தில் உள்ள அதிகமான பூர்வீக இடங்களை வில்பத்து வன பகுதிக்கான எல்லையாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன புதிய வர்த்தகமானியில் கையொப்பம் ஈட்டதை தொடர்ந்து  வர்த்தகமானி அறிவித்தலை உடனடியாக ஜனாதிபதி ரத்துச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் இன்று மாலை மரிச்சிகட்டி,பாலைக்குழி மற்றும் கரடிக்குழி மக்கள் போராட்டத்தை ஆரம்பித்து உள்ளதாக ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்தார்கள்.

மேலும் தெரிவிக்கையில் ;

பல வருடகாலமாக நாங்கள் வாழ்ந்த காணிகளை வில்பத்து பிரதேசமாக பிரகடனப்படுத்தியதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம் ஓரு போதும் எங்கள் தாய மண்ணை விட்டு வெளியேற மாட்டோம் என்றும் நேற்று கூட அதிமேதகு ஜனாதிபதிக்கு எங்கள் கோரிக்கையினை முசலி பிரதேசத்தில் உள்ள அனைத்து சமுக மட்ட அமைப்புக்கள் ஊடாக எங்கள் பிரச்சினையினை கூட அனுப்பி இருக்கின்றோம்.
கடந்த ஆட்சி காலத்தில் எங்களுக்கு அணியாயம் இடம்பெற்றதாக தெரிவித்து தான் இந்த நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கினோம் ஆனால் இந்த அரசாங்கம் எங்களுக்கு நல்லதை செய்யாமல் எங்கள் உறவுகள் பரம்பரையாக வாழ்ந்த காணியினை கொள்ளை அடிக்கும் சுழ்ச்சி வேலைகளை செய்து உள்ளார்கள்.
எங்கள் போராட்டத்திற்கு கட்சி அரசியலுக்கு அப்பால் அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றோம். என தெரிவித்தார்கள்.

Related posts

இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவருக்கு விளக்கமறியல்!

Editor

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல், வடமத்திய மற்றும் தென் மாகாணங்களில் இடங்களில் மழை! மன்னாரில் 2மணிக்கு பிறகு

wpengine

கட்டாய எரிப்பு ஒழுங்குவிதி சட்டத்திற்குட்பட்டதா?- பகுதி-3

wpengine