பிரதான செய்திகள்

வில்பத்து வனப்பகுதில் 4 வருடங்களில் காணியாக கையளிக்கப்படவில்லை

வில்பத்து வனப்பகுதி தனி ஒருவருக்கோ அல்லது எந்த ஒரு அமைப்புக்கோ கடந்த 4 வருடங்களில் காணியாக கையளிக்கப்படவில்லை என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
திரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்தும் யோசனை, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் யுனெஸ்கோ அமைப்பின் பிரதிநிதியிடம் இன்று கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வு கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் இடம்பெற்றது.

மூன்று நிக்காயாக்களின் மஹாநாயக்கர்கள், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டுள்ளனர்.

2500 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையில் மஹா சங்கத்தினர் பாதுகாத்து வந்த தேரவாத பௌத்த சமயத்தை எதிர்கால சந்ததியினருக்காக வழங்கும் நோக்குடன் திரிபீடகம் தேசிய மரபுரிமை சொத்தாக கடந்த ஜனவரி மாதம் 5ஆம் திகதி பிரகடனம் செய்யப்பட்டது.

இந்தநிலையில், இன்று இடம்பெற்ற நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, பௌத்த மக்களிடையேயும், ஊடகங்களிலும் பேசும் பொருளாக மாறியுள்ளது வில்பத்து விவகாரம் என குறிப்பிட்டார்.

கடந்த 2015ஆம் ஆண்டு முதல் இன்று வரை வில்பத்து வனப்பகுதியில் எந்த ஒருவருக்கும் அல்லது நிறுவனங்களுக்கும் காணி வழங்கப்படவில்லை என ஜனாதிபதி தெரிவித்தார்.

Related posts

மன்னார், முசலியில் உயர்தர மாணவர்களுக்கான “சிப்தொர” புலமைப்பரிசில் வழங்கி வைப்பு!

Editor

Braking மன்னாரில் கொரோனா அனைவருக்கும் (P.C.R) பரிசோதனை-

wpengine

அதிபர்களுக்கு மேலும் பல பொறுப்புகளை வழங்கிய கல்வி அமைச்சு

wpengine