பிரதான செய்திகள்

வில்பத்து பிரச்சினை! றிஷாட்டை பலவீனப்படுத்த டயஸ்போரா, பொதுபல சேனா. மு.கா முயற்சி

ஜ‌னாதிப‌தியின் வில்ப‌த்து பிர‌கட‌ன‌ம் என்ப‌து அமைச்ச‌ர் ரிசாதும் ஜ‌னாதிப‌தி மைத்ரியும் தேர்த‌லுக்காக‌ செய்யும் நாட‌க‌ம் என‌ முஸ்லிம் காங்கிர‌சை சேர்ந்த‌ சில‌ர் சொல்வ‌து ம‌ர‌த்திலிருந்து விழுந்த‌வ‌ன் மீது ஏறி மிதிப்ப‌தாகும்.

ம‌ன்னார் ம‌றிச்சுக்க‌ட்டி போன்ற‌ பிர‌தேச‌ங்க‌ளில் பெரும்பாலும் அமைச்ச‌ர் ரிசாதின் செல்வாக்கே உள்ள‌து. இப்ப‌குதியில் அர‌ச‌ சார்பான‌ அ. இ. ம‌க்க‌ள் காங்கிர‌சுக்கு அதிக‌ வாக்குக‌ளை உருவாக்க‌ வேண்டும் என‌ ஜ‌னாதிப‌தி நினைத்தால் அத‌ற்கு முஸ்லிம்க‌ளின் வீடுக‌ளை காடுக‌ள் என‌ பிர‌க‌ட‌னப்ப‌டுத்துவ‌த‌ன் மூல‌ம் சாத்திய‌மா அல்ல‌து 2012ம் ஆண்டு வெளியிடப்ப‌ட்ட‌ வ‌ர்த்த‌மாணியை ர‌த்து செய்வ‌த‌ன் மூல‌ம் முடியுமா என்ப‌தைக்கூட‌ சிந்திக்க‌த்தெரியாதோராக‌ முஸ்லிம் அர‌சிய‌ல்வாதிக‌ள் சில‌ர் இருப்ப‌து க‌வ‌லையான‌தாகும்.

இன்று த‌மிழ் ம‌க்க‌ள் இராணுவ‌த்தால் பிடிக்க‌ப்ப‌ட்டுள்ள‌ காணிக‌ளை விடுவிக்க‌ கோருகிறார்க‌ள். த‌மிழ் ம‌க்க‌ள் வாக்குக‌ள் த‌ம‌க்கு கிடைக்க‌ வேண்டும் என‌ மைத்திரி எதிர் பார்த்தால் அவ‌ர் அக்காணிக‌ளை விடுவிப்ப‌த‌ன் மூல‌ம் த‌மிழ் ம‌க்க‌ளின் அபிமான‌த்தை பெற‌ முடியுமா அல்ல‌து மேலும் ப‌ல‌ காணிக‌ளை இராணுவ‌ம் பிடிக்க‌ச்செய்வ‌த‌ன் மூல‌ம் முடியுமா?

இதே போன்ற‌தே வில்ப‌த்து பிர‌ச்சினையாகும்.

வில்ப‌த்து பிர‌ச்சினைக்கு அடிப்ப‌டை கார‌ண‌ம் ட‌ய‌ஸ்போராவும் அவ‌ர்க‌ள் நிதியுத‌வியுட‌ன் இய‌ங்கும் பொது ப‌ல‌ சேனா போன்ற‌ இன‌வாத‌ அமைப்புக்க‌ளுமாகும். இந்த‌ அர‌சாங்க‌ம் ட‌ய‌ஸ் போறாவின் இய‌க்க‌த்திலேயே காரிய‌மாற்றுகிற‌து என்ப‌து அனைவ‌ருக்கும் தெரியும். அத‌னால்தான் அமைச்ச‌ர் ரிசாதை அர‌சிய‌லில் ப‌ல‌வீன‌ம‌டைய‌ச்செய்யும் நோக்குட‌னேயே இப்ப‌டியான பிர‌ச்சினைக‌ள் வ‌ட‌ மாகாண‌ முஸ்லிம்க‌ளுக்கு ஏற்ப‌டுத்த‌ப்ப‌டுகின்ற‌ன‌.

அமைச்ச‌ர் அஷ்ர‌புக்கு முட்டுக்க‌ட்டை போட்டால் அவ‌ரை அர‌சிய‌லிலிருந்து தூர‌மாக்கி விட‌லாம் என‌ இன‌வாதிக‌ள் க‌ன‌வு க‌ண்டு அவ்வாறு செய்த‌ போது அது அஷ்ர‌புக்கு ச‌மூக‌த்தில் மேலும் வ‌லுவை சேர்த்த‌து போல் வில்ப‌த்து போன்ற‌ இன‌வாத‌ செய‌ல்க‌ளால் அமைச்ச‌ர் ரிசாத் மீதான‌ முஸ்லிம்க‌ளின் அன்பு அதிக‌ரித்து வ‌ருகிற‌து. இத‌னை பொறுத்துக்கொள்ளாமையின் எதிரொலியே மு. காவின‌ரின் இத்த‌கைய‌ குற்ற‌ச்சாட்டுக‌ளாகும்.

ஆக‌வே இது விட‌ய‌த்தில் முஸ்லிம் க‌ட்சிக‌ள் அனைத்தும் ஒன்று ப‌ட்டு மேற்ப‌டி புதிய‌ ம‌ற்றும் ப‌ழைய‌ வ‌ர்த்த‌மாணியை ர‌த்துச்செய்ய‌ முன்வ‌ர‌ வேண்டும் என‌ உல‌மா க‌ட்சி கேட்டுக்கொள்கிற‌து.

Related posts

மூதூர் பகுதியில் முஸ்லிம்,தமிழர் மீது அதிகாரிகள் தாக்குதல்

wpengine

பலசரக்கு ஏற்றுமதி மூலம் வரலாற்றில் அதிகூடிய வருமானம் இலங்கைக்கு

wpengine

நுவரெலியா பயணம்! குடும்பத்தை துன்பத்தில் ஆழ்த்திய முகநூல் “செல்பி”

wpengine