Breaking
Tue. Nov 26th, 2024

(ஹபீல் எம்.சுஹைர்)

அமைச்சர் றிஷாத் முசலி பிரச்சினையை சர்வதேச மயப்படுத்தும் சந்தர்ப்பத்தை தவறவிட்டதாக மு.காவினர் கட்டுரை எழுதுகின்றனர்.அந்த அடர்ந்த காட்டுக்கள் மோடி செல்லவில்லை.அப்படி இருக்க,அதை நிறுத்தியது எப்படி சர்வதேச மயப்படுத்தும் சந்தர்ப்பத்தை தவற செய்துவிட்டதோ தெரியவில்லை.

இப் பிரச்சினையை அமைச்சர் றிஷாத் மாத்திரமே சர்வதேச மயப்படுத்த வேண்டும் என்ற கடப்பாடு இல்லை.மு.காவினர் நினைத்திருத்தால் முசலி பிரதேசத்தை சேர்ந்த சிலரை ஒன்று கூட்டி,மோடி காணும் வகையில் அவர் செல்லும் பாதைக்கு அருகாமையில் ஒரு பெரும் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தால் இப் பிரச்சினையை அவர்கள் கூறும் வகையில் சர்வதேசம் கொண்டு சென்றிருக்கலாம் (மு.காவினர் அழைத்தால் முசலி மக்கள் வருவார்களா என்பது வேறு விடயம்).ஏன் அதனை மு.காவினால் செய்ய முடியாது போனது?

அமைச்சர் ஹக்கீம் மோடியின் வருகையின் போது முன் வரிசையில் நின்று தனது விசுவாசத்தை வெளிப்படுத்தி இருந்தார்.அப்போது கூட இப் பிரச்சினை குறித்து கதைத்து மோடியினூடாக சர்வதேச மயப்படுத்தி இருக்கலாமே! அதனை அமைச்சர் ஹக்கீம் செய்யாது போனதேன்? அல்லாது போனால் மோடி அப்படி ஏதும் வாக்குறுதி தந்தாரோ?

இந்திய முஸ்லிம்களின் தலைகள் மீது நெருப்பை கொட்டி கொண்டிருக்கும் மோடி இலங்கை முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் செய்வது கண்டு கவலையுற்று சர்வதேசம் கொண்டு செல்வார் என்பது உலகம் அறியாதவர்களின் கூற்று.

எனவே,அமைச்சர் றிஷாத் மீது முன் வைக்கப்படும் குற்றச் சாட்டுக்கள் வெறும் போலியானவையாகும்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *