Breaking
Tue. Sep 17th, 2024

வில்பத்து வனப் பகுதியில் தொடர்ந்தும் காடழிப்பு இடம்பெற்று வருவதாக சூழலியலாளர் சஞ்சிவ சாமிக்க தெரிவித்துள்ளார்.

மன்னார் பகுதியை அண்மித்துள்ள வனப் பகுதியிலேயே இந்த காடழிப்பு இடம்பெற்று வருவதாக கூறப்படுகின்றது.

யுத்த சூழ்நிலை காரணமாக இந்த பகுதியிலிருந்து பெரும் எண்ணிக்கையிலான மக்கள் 1990ஆம் ஆண்டுகளில் வெளியேறி, புத்தளம் பகுதியில் குடியேறியிருந்துள்ளனர்.

யுத்தம் நிறைவடைந்த பின்னர், குறித்த பகுதியில் இருக்கும் தமது சொந்த நிலங்களுக்கு வருகைத் தந்து மீண்டும் இவர்கள் குடியேறியுள்ளதாக கூறப்படுகின்றது.

எனினும், மன்னார் பகுதியிலிருந்து வெளியேறிய தொகையை விட மீள இந்த பகுதிக்கு வருகைத் தந்தோரின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளதாக அந்த பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர்.

இதனால் தமது சொந்த நிலங்களை பகிர்ந்து தற்போது அதே பகுதியில் தாம் குடியேறியுள்ளதாகவும் அவர் கூறுகின்றனர்.

இந்த பகுதிக்கு குடியேறிய மக்களுக்கான காணி உறுதிப் பத்திரம் கடந்த ஆட்சிக் காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினால் வழங்கப்பட்டுள்ளன.

எனினும், குறிப்பிட்ட காணியை விடவும் பெரும்பாலான காணிகளை அந்த பகுதியிலுள்ள மக்கள் சட்டவிரோதமான முறையில் கைப்பற்றியுள்ளதாக சூழலியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

தொடர்ந்தும் குறித்த பகுதியில் சட்டவிரோதமான முறையில் காடழிப்பு இடம்பெற்று வருவதாக அவர்கள் குற்றஞ்சுமத்துகின்றனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *