பிரதான செய்திகள்

வில்பத்து காணி விவகாரம்!அறிவித்தல் உடனடியாக மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும்-அமீர் அலி

வில்பத்து காணிக்கு அரசாங்கத்தால் செய்யப்பட்டிருக்கின்ற வர்த்தமானி அறிவித்தல் உடனடியாக மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வட்டாரக் கிளை ஓட்டமாவடியில் அங்குராப்பனம் செய்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு பிரதியமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

வில்பத்து காணிக்கு நீங்கள் செய்திருக்கின்ற வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக மீள்பரிசீலனை செய்யவில்லை என்றால் நாங்களும் மீள்பரிசீலனை செய்ய வேண்டி வரும் என்கின்ற விடயத்தை ஜனாதிபதிக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தெளிவாக தெரிவித்திருக்கின்றது.

கடந்த காலத்தில் மகிந்த ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று சிறுபான்மை சமூகம் சொன்ன பொழுது நாங்கள் எந்தவித கட்டுப்பாடுகளும் விதிக்காமல் முதலில் ஆட்சி பீடம் ஏற்றி அலங்கரித்தவர்கள்.

நாங்கள் தைரியமாக வெளியேறி இந்த அரசசை கொண்டு வருதற்கு முக்கிய ஊன்றுகோளாக அமைந்திருக்கின்றோம். பெருன்பான்மை சமூகங்களுக்கு சொல்லி தூண்டிவிடுவதற்காக நான் இங்கு இந்த விடயத்தை சொல்லவில்லை.

வில்பத்து காணி விடயத்தில் இழுத்தடிப்பு செய்து அல்லது நகர்த்தல் செய்தால் இதற்கு கடுமையான விலையை கொடுக்க வேண்டி வரும் என்ற எச்சரிக்கையை நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு சொல்லிக் கொள்ள வேண்டும் என்றார்.

Related posts

சுற்றுலா துறை அபிவிருத்தி தொடர்பான கூட்டம் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தலைமையில் கற்பிட்டியில்!

Editor

யாழ் மேயர் வேட்பாளர்! பொது அணி முயற்சி

wpengine

சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றால் ஒரு நிமிடம் கூட அரசாங்கத்தில் இருக்க போவதில்லை-வாசுதேவ

wpengine