மன்னார் மாவட்டத்தினையும்,புத்தள மாவட்டதையும் பிரிக்கும் பிரதான உப்பாற்று,வில்பத்து காட்டு பகுதியில் உள்ள மண் குவியலினை சட்டவிரோதமான முறையில் இன்று மாலை கடற்படை அதிகாரிகள் மண் அழ்வில் ஈடுபட்டதாக தெரியவருகின்றது.
பல லச்சம் ரூபா பெறுமதியான மண் குவியல் இந்த பகுதியில் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
கடற்படையினர் மண் அகழ்வும் பகுதி வில்பத்து காட்டு பகுதிக்கு சொந்தமானதாகவும் இருக்கின்றது.
கடற்படை மண் அகழ்வும் இடத்திற்கு முன்னால் வனவள திணைக்களத்தின் உப அலுவலகம் இருந்தும் இதனை உரிய அதிகாரிகள் தடுக்கவில்லை என அறியமுடிகின்றது.
இயற்கை வளத்தினை பாதுகாக்க முப்படையினை பயன்படுத்தி பாதுகாக்கபடும் என கடந்த சில வாரத்திற்கு முன்பு ஜனாதிபதி தெரிவித்தும்.இப்படியான இயற்கை வளங்கள் சூறையாடப்படுகின்றது என அறியமுடிகின்றது.