அரசியல்

விலங்குகளை கணக்கிடுவதால் தீர்வு காண முடியாது. – குரங்குக்கு 500 அல்லது 1000 ரூபாய் வரை வழங்கப்படும் என்று அறிவியுங்கள்.

பயிர்செய்கைகளை நாசம் செய்யும் வன விலங்குகளை கட்டுப்படுத்தாமல் விவசாயத் துறையில் தன்னிறைவடைய முடியாது. குரங்குகளை பிடித்து கொடுத்தால் ஒரு குரங்குக்கு 500 முதல் 1000 ரூபாய் வரை வழங்கப்படும் என்று அறிவியுங்கள் என  ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (12) நடைபெற்ற  2025 ஆம் ஆண்டுக்கான  வரவு செலவுத் திட்டத்தின்  கமத்தொழில்,  கால்நடை வளங்கள் ,காணி மற்றும்  நீர்ப்பாசன  அமைச்சு மீதான விவாதத்தில்  உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது;

விவசாயத்துறையை மேம்படுத்துவதற்கு அரசாங்கம்  சிறந்த திட்டங்களை முன்வைத்துள்ளது. வரவேற்கிறோம். விவசாயத்துறை  தன்னிறைவடைந்தால் ஒட்டுமொத்த மக்களும் பயனடைவார்கள். நாடும் செழிப்படையும். ஆகவே சிறந்த திட்டங்களுக்கு  நிபந்தனையற்ற வகையில் ஒத்துழைப்பு வழங்குவோம்.

காட்டு விலங்குகளினால்  பயிர்ச்செய்கைகளுக்கு  ஏற்படும் பாதிப்பு நாளாந்தம் தீவிரமடைந்துள்ளது. இதனால்  விவசாயிகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். குரங்குகள் வருடாந்தம் 90 மில்லியன் அளவிலான தேங்காய்களை நாசம் செய்வதாக  விவசாயத்துறை அமைச்சு குறிப்பிடுகிறது.

காட்டு விலங்குகளை கட்டுப்படுத்துவற்கு எமது  அரசாங்கத்திலும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.    விலங்குகளுக்கு கருத்தடை செய்வது அல்லது குரங்கு உள்ளிட்ட அதிக இனப்பெருக்கமடையும் விலங்குகளை  தனித்த காட்டு பகுதிகளுக்கு கொண்டு சென்று விடுதல் உள்ளிட்ட யோசனைகள் முன்வைக்கப்பட்ட.ன.இதற்கு  அதிக நிதி செலவாகும் என்பதால்  அந்த யோசனைகள் செயற்படுத்தப்படவில்லை.

மார்ச் 15 ஆம் திகதி  வீட்டுத் தோட்டங்களுக்கும், விளைநிலங்களுக்கும் வரும்  காட்டு விலங்குகளை  கணக்கிடுமாறு குறிப்பிடப்படுகிறது. கணக்கிடுவதால் மாத்திரம் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது.  குரங்குகளை பிடித்துக் கொடுத்தால் ஒரு குரங்குக்கு 500 அல்லது 1000 ரூபாய் வரை வழங்கப்படும்  என்று அறிவியுங்கள். குரங்குகளே  பயிர்ச்செய்கைகளை அதிகளவில் நாசம் செய்கின்றன. கருத்தடை செய்ய முடியாவிடின் அவற்றை தனித்த  காட்டு பகுதிகளுக்காவது கொண்டு சென்று விடுங்கள்.

காட்டு விலங்குகளை கட்டுப்படுத்தாமல் விவசாயத்துறையில் தன்னிறைவடைய முடியாது. ஆகவே பேசிக்கொண்டிருக்காமல் உரிய நடவடிக்கைகளை முன்னெடுங்கள் என்றார்.

☀️ வன்னிநியூஸ் வட்ஸ்ப் குழுவில் இணைய: https://chat.whatsapp.com/ECH9aFFlKIJB0htsdAdJyg

Related posts

வறுமை தொடர்பில் புரிதல் இன்றி, அஸ்வெசும வெற்றி குறித்து எவ்வாறு தீர்மானிக்க முடியும்? “சஜித் “.

Maash

முடிந்தால் 1350 ரூபாவிலிருந்து 1 ரூபா அடிப்படை சம்பளத்தை அதிகரித்துக் காட்டுங்கள், ஜீவன் சவால்.!

Maash

யோஷித்த ராஜபக்சவின் பாட்டி டெய்சி பொரெஸ்ட் கைது

Maash